For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

KKR vs CSK: ”ஜடேஜா போதும்பா.. தோனிய வர சொல்லுங்கய்யா” சிஎஸ்கே ரசிகர்களின் தெறிக்கும் மீம்ஸ் இதோ!

கொல்கத்தா: கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்துள்ளது. கான்வே, ரஹானே மற்றும் சிவம் துபே ஆகியோர் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். சென்னை அணியின் பேட்டிங்கை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

IPL 2023: Stunning memes of CSK fans, after set a target of 236 runs for KKR

இன்றையப் போட்டியில் சென்னை அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே, தொடர்ச்சியாக 4வது அரைசதத்தை அடித்து அசத்தினார். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய அவர், 40 பந்துகளில் 56 ரன்களை விளாசினார். இதனை, மெர்சல் படத்தில் வடிவேலு, "இரு விஜயின் கோபம் மற்றும் அனுதாபத்தை பார்த்து அண்ணன் வெற்றிமாறனை பார்க்குற மாதிரியே இருக்கு" என்று பேசுவார். அதனை அப்படியே மாற்றி ரசிகர்கள் பேசுவது போல், "உங்க பேட்டிங் பார்க்கும் போது எங்கள் தளபதி ஹசி பேட்டிங் பார்க்குற மாதிரியே இருக்கு" என்று உருவாக்கப்பட்ட மீம் வெறித்தனம்.

IPL 2023: Stunning memes of CSK fans, after set a target of 236 runs for KKR

இன்றையப் போட்டியில் ரஹானே 29 பந்துகளில் 72 ரன்கள் விளாசினார். பேட்டிங்கின் போது திடீரென ஸ்கூப், ரேம்ப் ஷாட்ஸ்களை ரஹானே ஆடியது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனை கடைகுட்டி சிங்கம் படத்தில் வரும், "உனக்கு அழுகைலாம் வருமா குட்டி மாமா" என்ற வசனத்தை மாற்றி, " எங்க குட்டி மாமாக்கு இந்த மாதிரி ஷாட்ஸ் கூட விளையாட வருமா" என்று உருவாக்கப்பட்ட மீம் அட்டகாசம்.

IPL 2023: Stunning memes of CSK fans, after set a target of 236 runs for KKR

கேகேஆர் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில், சிவம் துபே கால்களை நகர்த்தாமல் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசினார். அதனை வைத்து தில்லாலங்கடி படத்தில் வரும் ஜெயம் ரவி பேசுவது போல், "ஃபுட் வொர்க்கோட சிக்ஸ் அடிக்கிறதுல என்ன சார் கிக்கு.." என்று உருவாக்கப்பட்ட மீம் அட்ராசக்க ரகம்.

IPL 2023: Stunning memes of CSK fans, after set a target of 236 runs for KKR

அதேபோல் சிவம் துபே 20 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தி இருந்தார். அதனை பீஸ்ட் படத்தில் மாலில் சிக்கும் விஜய், குழந்தையை காப்பாற்ற பயங்கரவாதியின் தலையை வெட்டுவார். அந்த தலை மாலுக்கு வெளியில் போய் விழும். அந்த விஜய் போல் பீஸ்ட் மோடில் துபே ஆடுவதாக உருவாக்கப்பட்ட மீம் தெறி.

IPL 2023: Stunning memes of CSK fans, after set a target of 236 runs for KKR

அதேபோல் ஜடேஜா களமிறங்கும் போதே மைதானத்தில் தோனி.. தோனி என்ற கரகோஷம் எழுந்தது. ஒருவர் ஜடேஜாவை முதல் பந்திலேயே ஆட்டமிழக்குமாறு மைதானத்தில் போர்ட் வைத்து ஆச்சரியம் அளித்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயன் பேசும் போது, நீ பேசுவதுலாம் போதும்.. திண்டுக்கல் ரீட்டாவ வர சொல்லுங்கடா என்று ஒரு வசனம் வரும். அதேபோல், ரசிகர்கள் ஜடேஜாவிடம் சொல்வது போல், "நீ ஆடுனதுலாம் போதும்.. தோனி பாய வர சொல்லுங்கய்யா.. வர சொல்லுங்கய்யா" என்று உருவாக்கப்பட்ட மீம் ஜாலி ரகம்.

Story first published: Sunday, April 23, 2023, 22:23 [IST]
Other articles published on Apr 23, 2023
English summary
IPL 2023: Chennai super Kings Fans created some fantastic memes after CSK set a target of 236 for KKR to win
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+