Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"இந்தியாவின் பிரண்டன் மெக்கல்லமே" கேகேஆர் அணியை வீழ்த்திய பல்தான்ஸ்.. ரசிகர்களின் தெறிக்கும் மீம்ஸ்!

மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸ் பற்றி பார்க்கலாம்.

IPL 2023: Stunning memes of fans from Social media after Mumbai beats KKR today

மும்பை அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கும் மேலாக பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டிருந்த அர்ஜூன் டெண்டுல்கர் இன்று அறிமுகமாகினார். அதேபோல் மும்பை அணி சார்பாக மகளிர் விலையாட்டை ஊக்குவிக்கும் வகையில் 19 ஆயிரம் பெண்களை மும்பை அணி நிர்வாகம் மைதானத்திற்கு அழைத்து வந்தது. இதேபோல் ஜிகர்தண்டா படத்தில் பாபி சிம்ஹா படத்தின் ரிலீசிற்கு இலவச டிக்கெட் கொடுத்து மக்களை அழைத்து வருவார்கள். அந்த காட்சியை வைத்து, "இந்தாங்கம்மா.. இதுலாம் இலவச டிக்கெட்.. சின்னவர் ஒரு டாட் பால் வீசினாலும் சத்தம் போடனும்.. புரியுதா?" என்று உருவாக்கப்பட்ட மீம் அட்ராசக்க ரகம்.

IPL 2023: Stunning memes of fans from Social media after Mumbai beats KKR today

கொல்கத்தா அணிக்காக சதம் விளாசிய 2வது வீரர் என்ற பெருமையை வெங்கடேஷ் ஐயர் பெற்றுள்ளார். 2008ஆம் ஆண்டு நடந்த முதல் போட்டியில் மெக்கல்லம் சதமடித்தார். அதன் பின்னர் 15 ஆண்டுகளுக்கு பின் வெங்கடேஷ் ஐயர் சதமடித்துள்ளார். அதனை புதுப்பேட்டை கிளைமாக்ஸ் காட்சியில் "எங்கள் தலைவா" என்று முதலமைச்சரை வாழ்த்தி தனுஷ் மைக்கில் கோஷமிடுவார். அதுபோல் கேகேஆர் அணி ரசிகர்கள், வெங்கடேஷ் ஐயரை, "இந்தியாவின் பிரெண்டன் மெக்கலமே" என்று கோஷமிடுவது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.

IPL 2023: Stunning memes of fans from Social media after Mumbai beats KKR today

அதேபோல் அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகமாவதை வைத்து இன்னொரு மீம் உருவாக்கப்பட்டுள்ளது. வேட்டைக்காரன் படத்தில் நான் அடிச்சா தாங்க மாட்டா பாடலில் விஜய் தனது மகனை ஆட வைத்திருப்பார். அதில் விஜய் மகனும் விஜயும் ஒரே மாதிரி நடப்பது போன்று காட்சி வரும். அதனை மகன் சஞ்சயாக அர்ஜுனை மாற்றி உருவாக்கப்பட்ட மீம் ஃபன் ரகம்.

IPL 2023: Stunning memes of fans from Social media after Mumbai beats KKR today

அதேபோல் காதல் கொண்டேன் படத்தில் வகுப்பில் தூங்கி கொண்டிருக்கும் தனுஷை திட்டி, அடித்து வாத்தியார் பொறியியல் கணக்கை தீர்க்க சொல்லுவார். அதற்கு உடனே தனுஷிம் சென்று அந்த கடினமான கணக்கை எளிதாக எழுதுவார். அந்த காட்சி போல் தொடர்ந்து சொதப்பிய இஷான் கிஷனை, "இவ்ளோ ஸ்லோவாக ஆடுறியே.. ரூ.15 கோடி வாங்குனதுக்கு கொஞ்சமாச்சும் அடி" என்று மும்பை அணி நிர்வாகம் அடிப்பது போலும், உடனே இஷான் கிஷனும் 25 பந்துகளில் 58 ரன்கள் அடித்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட மீம் வேற லெவல்.

IPL 2023: Stunning memes of fans from Social media after Mumbai beats KKR today

இன்றையப் போட்டியில் மும்பை பேட்ஸ்மேன் இஷான் கிஷன் 25 பந்துகளில் 58 ரன்கள் அடித்து அசத்தினார். நீண்ட நாட்களுக்கு பின் இஷான் கிஷன் அதிரடியான இன்னிங்ஸை ஆடினார். அதனை விஜய் நடித்த பிரண்ட்ஸ் படத்தில் அனைத்து மறந்து லூசாக இருக்கும் சார்லி திருந்திய பின் அனைவரையும் நினைவுபடுத்தி நண்பர்களிடம் கேள்வி கேட்பார். அதுபோல் இஷான் கிஷனும் பழைய நினைவுக்கு வந்து, "எனக்கு பழசுலாம் நியாபகம் வந்துருச்சு. போல்ட், ஹர்திக்லாம் எங்க காணோம்" என்று இஷான் கிஷன் ரோகித், பொல்லார்டிடம் கேட்பது போல் உருவாக்கப்பட்ட மீம் அசத்தல்.

Story first published: Sunday, April 16, 2023, 22:37 [IST]
Other articles published on Apr 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+