Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"பிரீத்தி ஜிந்தாவை காப்பாற்றிய ஷாரூக் கான்" லக்னோ அணியுடன் கணக்கை தீர்த்த பஞ்சாப்.. வெறித்தன மீம்ஸ்!

லக்னோ: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 19.3 ஓவரில் இலக்கை எட்டி வெற்றிபெற்றது. இந்த போட்டிக்கு பின் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸ் பற்றி பார்க்கலாம்.

IPL 2023: Stunning memes of Punjab defeat Lucknow by 2 Wickets

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக ஷிகர் தவான் களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக இளம் வீரர் சாம் கரண் கேப்டனாக பொறுப்பேற்றார். இதன் மூலம் பஞ்சாப் அணியின் 15வது கேப்டனாக சாம் கரண் களமிறங்கினார். 16 சீசன்களில் 15 கேப்டன்கள் நியமிக்கப்பட்டதில் பஞ்சாப் அணி தனி சாதனையே படைத்துள்ளது. இதனை கிண்டல் செய்யும் வகையில் சூர்யவம்சம் படத்தில் மக்கள் அனைவருக்கும் குடம் கொடுக்கும் சரத்குமார் - தேவயாணி போல் அனைத்து வீரர்களுக்கு கேப்டன்சியை பஞ்சாப் நிர்வாகமும், பிரீத்தி ஜிந்தாவும் கொடுப்பதாக ரசிகர்கள் உருவாக்கியுள்ள மீம் காமெடி.

IPL 2023: Stunning memes of Punjab defeat Lucknow by 2 Wickets

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் தொடக்கம் முதலே நிதானமாக ஆடினார். இதனால் 40 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், இறுதியாக 56 பந்துகளில் 74 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் லக்னோ அணியின் ஸ்கோரும் குறைந்தது. இந்த நிலையில் கே.எல்.ராகுலின் பேட்டிங் அனைவருக்கும் தூக்கத்தை வரவழைத்துவிட்டதாக ரோகித் சர்மா, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் சர்ஃபராஸ் அஹ்மத் ஆகியோர் கொட்டாவி விடுவது போல் புகைப்படத்தை இணைத்து உருவாக்கப்பட்ட மீம் அட்றாசக்க ரகம்.

IPL 2023: Stunning memes of Punjab defeat Lucknow by 2 Wickets

பஞ்சாப் அணியின் பேட்டிங்கின் போது முக்கியமான கட்டத்தில் கேப்டன் சாம் கரண் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறுவார். இதனால் சிக்கந்தர் ராசா மட்டுமே முழுமையான பேட்ஸ்மேனாக களத்தில் இருப்பார். இதனை, விருமாண்டி படத்தில் வில்லன் பசுபதி தப்பிப்பதற்காக குழந்தையை தலை கீழாக தூக்கி கமலை மிரட்டும் போது," மாப்ள காப்பாத்து மாப்ள" என்று வசனம் வரும். அந்த வசனத்தை அப்படியே குழந்தையாக சாம் கரணையும், ராசாவாக கமலையும் மாற்றி உருவாக்கப்பட்டுள்ள மீம் அசத்தல்.

IPL 2023: Stunning memes of Punjab defeat Lucknow by 2 Wickets

கடைசி ஓவரில் பஞ்சாப் அணி வெற்றிபெற 7 ரன்கள் தேவைப்படும் நிலையில், இளம் வீரர் ஷாரூக் கான் 3 பந்துகளிலேயே இலக்கை எட்டி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வார். இதனால் பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரித்தி ஜிந்தாவை சினிமாவில் காப்பாற்றிய ஷாரூக் கானின் புகைப்படத்தை இணைத்து, பஞ்சாப் கிங்ஸ் அணியையும் ஷாரூக் கான் காப்பாற்றியதாக உருவாக்கப்பட்ட மீம் கலக்கல் ரகம்.

IPL 2023: Stunning memes of Punjab defeat Lucknow by 2 Wickets

அதேபோல் சிக்கந்தர் ராசா அரைசதம் விளாசியதன் மூலம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் ஆட்டநாயகன் விருது வென்ற முதல் ஜிம்பாப்வே வீரர் என்ற பெருமையை ராசா பெற்றுள்ளார். இதனை கே.ஜி.எஃப் ராக்கி பாய் நடந்து வரும் காட்சியோடு ஒப்பிட்டு "அடிமையில்ல.. தலைவன்" என்று உருவாக்கப்பட்ட கூல்பம்ப் ஃபீல்.

Story first published: Sunday, April 16, 2023, 7:49 [IST]
Other articles published on Apr 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+