For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL - 7 ஆயிரம் ரன்களை தொட்ட கோலி.. ஸ்ட்ரைக் ரேட்டில் சொதப்பிய கிங்.. கடைசியில் காப்பாற்றிய லோம்ரர்

டெல்லி : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி நடப்பு சீசனில் மட்டும் 6வது அரைசதம் அடித்திருக்கிறார். ஆனால் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைவான அளவில் உள்ளது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியில் தொடக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் டுபிளஸிஸ் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். பவர்பிளே முடிவில் அர்சிபி அணி, விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்தது.

IPL 2023 - Virat kohli reached 7000 runs in ipl and rcb set 182 runs as target

அதன் பிறகு வழக்கம் போல் கோலி ஸ்லிப்பிங் மோடுக்கு செல்ல டுபிளசிஸ் தனி ஆளாக போராடியது. டுபிளசிஸ் 32 பந்துகளுக்கு 45 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்ப, மேக்ஸ்வெல் டக் அவுட் ஆனார். 12.4 வது ஓவரில் ஆர்சிபி அணி 100 ரன்களை அடித்தது. ஆனால் அதன் பிறகு கோலி அரைசதம் அடிப்பதற்காக ஆர்சிபி அணியின் ஸ்கோர் அடிக்கும் வேகம் சரிந்தது.

இதனால் கோலி 42 பந்தில் தான் அரைசதம் அடித்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 7 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதனால் 15 வது ஓவரில் ஆர்சிபி அணி 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து, கடைசி 5 ஓவரில் மஹிபால் லோம்ரர் 29 பந்துக்கு 54 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Story first published: Saturday, May 6, 2023, 21:37 [IST]
Other articles published on May 6, 2023
English summary
IPL 2023 - Virat kohli reached 7000 runs in ipl and rcb set 182 runs as target IPL - 7 ஆயிரம் ரன்களை தொட்ட கோலி.. ஸ்ட்ரைக் ரேட்டில் சொதப்பிய கிங்.. கடைசியில் காப்பாற்றிய லோம்ரர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+