For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது எனக்கு ஸ்பெஷல் சதம்.. ஆனால் பெருமை கொள்ளவில்லை.. காரணத்தை சொன்ன விராட் கோலி

ஐதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி இன்று தனது 6வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய rcb அணி ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. இதில் 188 ரன்கள் என்று இலக்கை ஆர் சி பி அணி எதிர்கொண்டது.

அப்போது விராட் கோலி 62 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்து rcb அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன் மூலம் ஆட்ட நாய்கள் விருதை வென்ற விராட் கோலி, அதை தற்போது பார்க்கலாம். இது போன்ற முக்கியமான ஆட்டத்தில் நான் சதம் அடித்து இருப்பது எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆக இருக்கிறது.

IPL 2023 -virat kohli speech after scoring century vs srh

ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் நின்று வந்தது. இதனால் பின்னால் வரும் வீரர்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக நாங்கள் நல்ல அடிதளத்தை கொடுக்க நினைத்தோம். ஆனால் 172 ரன்கள் வரை முதல் விக்கெட்டுக்கு நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை. டுபிளஸ்சி வேற ஒரு லெவலில் விளையாடி வருகிறார்.

நான் கடந்த சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. வலைப்பயிற்சியில் பந்துகளை அடிப்பது போல் ஆட்டத்தில் பந்துகளை நான் அடிக்கவில்லை. இன்று ஆட்டத்தில் முதல் பந்தலில் இருந்து பந்துவீச்சாளர்களை அடித்து ஆட வேண்டும் என்று நினைத்தேன். இன்று ஆட்டத்திலும் ரன் அடிக்கும் வேகம் குறையும் போது நான் மீண்டும் அதிரடியாக ஆட வேண்டும் என முடிவெடுத்து சரியாக விளையாடினேன் என நினைக்கிறேன்.

இன்றைய ஆட்டத்தில் அணிக்காக வெற்றியை தேடி கொடுத்தது மகிழ்ச்சி. நான் எப்போதும் எனது ரன் கணக்கிற்கு முக்கியத்துவம் தருவதில்லை. இதுபோன்ற முக்கியமான ஆட்டத்தில் பெரிய இன்னிங்ஸ் விளையாடியதற்கும் நான் பாராட்டுகளை எடுத்துக் கொள்ள மாட்டேன். நெருக்கடியான சூழலில் விளையாடி வெற்றி பெறுவது தான் எனக்கு பெருமை.

நான் வித்தியாசமான சாட்டுகளை எல்லாம் ஆடமாட்டேன். ஒரு ஆண்டில் 12 மாதங்களிலும் நாங்கள் விளையாடுகிறோம். இதில் வித்தியாசமான ஷாட்களை ஆடி எனது விக்கெட்டை இழக்க விரும்பவில்லை. நான் எப்போதுமே என்னுடைய கிரிக்கெட் யுக்திகளுக்கு உண்மையாக இருந்து அணிக்காக விளையாடுவதில் பெருமை கொள்கிறேன். டுபிளசிசும் நானும் விளையாடுவதை பார்க்கும் போது டெவிலியர்ஸும் நானும் விளையாடுவது போல் எனக்கு தெரிகிறது.

எங்கள் இருவருக்கும் ஆட்டத்தை எப்படி முன்னேற்றிக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அறிவு இருக்கிறது. ரசிகர்களிடமிருந்து இதுபோன்ற ஆதரவை நான் எதிர்பார்க்கவில்லை. இதற்காக நான் ஆசீர்வதிக்க பட்டவனாக உணர்கிறேன். நாங்கள் எங்கள் சொந்த மண்ணில் விளையாடுவது போல் இருக்கிறது. நான் விளையாடும் போது மக்கள் சந்தோஷப்படுவதை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று விராட் கோலி கூறியுள்ளார்.

Story first published: Thursday, May 18, 2023, 23:49 [IST]
Other articles published on May 18, 2023
English summary
Virat kohli shares his feelings and reason behind the century vs srh
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+