Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2023 - சென்னை, மும்பை அணி எந்த குரூப்? புதிய மாற்றத்துடன் அட்டவணை.. முழு விவரம்

மும்பை : ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் போட்டி மார்ச் 31ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் ஐபிஎல் தொடர் மார்ச் 26 ஆம் தேதி முடிவடையும் நிலையில் நான்கு நாட்கள் இடைவெளியில் மீண்டும் ஆடவர் ஐபிஎல் தொடர் தொடங்குகிறது.

இந்த முறை முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியன் ஆன குஜராத் டைட்டன்ஸ் அணியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் எதிர்கொள்கிறது.

லீக் போட்டிகள்

லீக் போட்டிகள்

இதனை தொடர்ந்து ஏப்ரல் ஒன்றாம் தேதி பஞ்சாப் அணி கொல்கத்தாவையும், மாலையில் லக்னோ அணி டெல்லியையும் எதிர்கொள்கிறது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத் அணி ராஜஸ்தானையும், பெங்களூர் அணி மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப் பரிட்சை நடத்துகிறது. லீக் சுற்றில் இம்முறை மொத்தம் 70 போட்டிகள் நடைபெறுகிறது.

12 நகரங்கள்

12 நகரங்கள்

சென்னை ,பெங்களூர், ஹைதராபாத் ,மும்பை ,கொல்கத்தா லக்னோ, டெல்லி, அகமதாபாத், ஜெய்ப்பூர், மொஹாலி, கௌஹாத்தி, தர்மசாலா ஆகிய 12 நகரங்களில் போட்டி இம்முறை நடத்தப்படுகிறது. ஐபிஎல் 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு கொரோனா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை காரணமாக சென்னையில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறாமல் இருந்தது.

நேரம்

நேரம்

இந்த நிலையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதால் மீண்டும் போட்டிகள் பழைய முறைப்படி நடத்தப்படுகிறது. வழக்கம்போல் போட்டிகள் மதியம் நேரத்தில் 3.30 மணிக்கும், மாலை நேரத்தில் 7:30 மணிக்கும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் அட்டவணை வசதிக்காக virtual குரூப் என கடந்த ஆண்டு பிரிக்கப்பட்டது. அதாவது ஒரு அணி மற்ற அணிகளுடன் எத்தனை முறை மோதும் என்பதை முடிவு செய்ய இந்த பிரிவுகள் பிரிக்கப்படும்.

குரூப்

குரூப்

அந்த வகையில் தற்போது ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு சீசனில் குரூப் ஏ வில் மும்பை, ராஜஸ்தான், கொல்கத்தா ,டெல்லி மற்றும் லக்னோ அணிகள் இடம்பெற்றுள்ளது. இதை போன்று குரூப் பி பிரிவில் சிஎஸ்கே, பஞ்சாப், ஹைதராபாத் ,பெங்களூரு ,குஜராத் அணிகள் மோதுகிறது.இதில் ஒவ்வொரு குரூப்பில் உள்ள அணிகள் மற்ற குரூப்பில் உள்ள அணிகளுடன் இரண்டு முறையும் தங்களுக்குள்ளே ஒரு முறையும் மோதிக் கொள்ளும்.

எத்தனை முறை பலப்பரீட்சை

எத்தனை முறை பலப்பரீட்சை

அதன்படி சிஎஸ்கே அணி மற்ற குரூப்பில் உள்ள மும்பை, ராஜஸ்தான் ,கொல்கத்தா, டெல்லி, லக்னோ அணிகளுடன் இரண்டு முறையும், தங்களது குரூப்பில் உள்ள பஞ்சாப், ஹைதராபாத், பெங்களூர் குஜராத் ஆகிய அணிகளுடன் ஒரு முறையும் மோதும். இதேபோன்று மும்பை அணி மற்ற குரூப்பில் உள்ள சிஎஸ்கே, பஞ்சாப் ,ஹைதராபாத், பெங்களூர், குஜராத் ஆகிய அணிகளுடன் இரண்டு முறையும் தங்களது குரூப்பில் உள்ள ராஜஸ்தான், கொல்கத்தா, டெல்லி, லக்னோ ஆகிய அணியுடன் ஒரு முறையும் மோதுகிறது. இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Friday, February 17, 2023, 18:28 [IST]
Other articles published on Feb 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+