For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL KKR vs Punjab - களத்தில் விழி பிதுங்கிய கொல்கத்தா.. மழை குறுக்கிட்டதால் யாருக்கு வெற்றி?

மொஹாலி : ஐபிஎல் தொடரின் 2வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணிகள், பஞ்சாப் அணிகள் மோதிய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக ஷிம்ரன் சிங் மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர்.

ஷீம்ரன் சிங் அதிரடியாக விளையாடி 23 ரன்கள் சேர்க்க, இதனையடுத்து 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தவான், ராஜபக்சா அபாரமாக விளையாடி ரன்களை குவித்தனர். சிறப்பாக விளையாடிய ராஜபக்சே அரைசதம் அடித்தார். ஜித்தேஷ் ஷர்மாவும் தன் பங்கிற்கு 11 ரன்கள் எடுத்த நிலையில், ஷிகர் தவான் 29 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார்.

IPL 2023 - Who won the match after rain intruption - KKR or Punjab

இறுதியில் சாம் கரண், ஷிக்ந்தர் ராசா ஆகியோர் அதிரடியாக விளையாட பஞ்சாப் அணி 5 விக்கெட்டு இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் கேகேஆர் அணி களமிறங்கியது. பஞ்சாப் அணியின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் கேகேஆர் வீரர்கள் தடுமாறினர்.

மந்தீப் சிங் 22 ரன்களிலும், குர்பாஷ் 22 ரன்களும், அன்கூல் ராய் 4 ரன்களும் ரிங்கு சிங் 4 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் 29 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து கொல்கத்தா தடுமாறியது. கேப்டன் நிதிஷ் ரானா போராடி 24 ரன்கள் சேர்க்க, இறுதியில் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஆண்டிரு ரஸில் 35 ரன்கள் எடுத்தார்.

IPL 2023 - Who won the match after rain intruption - KKR or Punjab

கேகேஆர் அணி 16 ஓவர் முடிவில்146 ரன்களக்கு 7 விக்கெட் இழந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் டக் வொர்த் லுயிஸ் விதிப்படி பஞ்சாப் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Story first published: Saturday, April 1, 2023, 20:03 [IST]
Other articles published on Apr 1, 2023
English summary
IPL 2023 - Who won the match after rain intruption KKR or Punjab IPL KKR vs Punjab
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+