Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2024 -இந்த 2 வீரர்களும், டி20 உலககோப்பைக்கு வேண்டும்! தேர்வுக்குழுவுக்கு கவாஸ்கர், பிரசாத் யோசனை

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிந்தவுடன் 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் மே மாதம் ஒன்றாம் தேதிக்குள் அறிவிக்கப்பட வேண்டும் என ஐசிசி கெடு விதித்துள்ளது.

இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறந்து விளையாடும் வீரர்களை வைத்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை தேர்வு செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு பேசிய கவாஸ்கர் மற்றும் வெங்கடேஷ் பிரசாத் பல யோசனைகளை தெரிவித்து இருக்கிறார்கள்.

IPL 2024 - 2 Players should be picked in icc t20 world cup says gavaskar and venkatesh prasad

இது குறித்து முதலில் பேசிய சுனில் கவாஸ்கர், ரியான் பராக் மீது தேர்வு குழுவினர் கண்டிப்பாக கவனம் செலுத்தி வருவார்கள் என நினைக்கின்றேன். இதையே அவர்,தொடர்ந்து செய்தால் நிச்சயம் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று கூறியுள்ளார். 15 டி20 போட்டிகளில் 10 அரை சதம் அடித்திருக்கிறார்.

மொத்தமாக 772 ரன்கள். சராசரி 90 என்ற அளவில் ஸ்ட்ரைக் ரேட் 170 என்ற அபாயகரமான அளவில் இருப்பதால் ரியான் பராக் நல்ல தேர்வாக இருப்பார்.மேலும் அவருக்கு சுழற் பங்கு வீசத் தெரியும் என்பது கூடுதல் சாதகம். இதை தொடர்ந்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் சிவம் துபே, கண்டிப்பாக இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சுழற் பந்துவீச்சாளருக்கு எதிராக சிவம் துபே, நன்றாக விளையாடி வருகிறார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தற்போது டி20 கிரிக்கெட் சூரியகுமார் தான் சிறந்த வீரராக இருக்கிறார்கள் என்று குறிப்பிட்ட அவர் இந்த மூன்று வீரர்களையும் இந்திய அணி பிளேயிங் லெவனில் சேர்ப்பது மிகவும் முக்கியம் என்று கூறியுள்ளார்.

இது தவிர்த்து விராட் கோலி ,ரோகித் சர்மா மற்றும் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கு இடம் கிடைத்தால் நிச்சயம் இந்திய அணி உலக கோப்பை வெல்லும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய அணியை குறித்து பேசிய அவர் ஹர்திக் பாண்டியா செயற்கை ராகுல் ஆகியோர் குறித்து எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்திய டி20 அணி குறித்து பேசிய ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாஜ், விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மூன்று முன்னாள் வீரர்களின் படி இந்திய அணி அமைக்கப்பட்டால் நிச்சயம் பலம் வாய்ந்ததாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, April 12, 2024, 12:53 [IST]
Other articles published on Apr 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+