Devon conway : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பது தொடக்க வீரர்கள் தான். எப்போதுமே தொடக்க ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்துக் கொடுப்பது சிஎஸ்கேவுக்கு மட்டும்தான். இந்த நிலையில் கடந்த ஆண்டு கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.
குறிப்பாக நியூசிலாந்தை சேர்ந்த கான்வே 16 போட்டிகளில் விளையாடி 672 ரன்கள் எடுத்தார். இதில் அதிகபட்சமாக 92 ரன்கள் அடங்கும். இதில் ஆறு அரை சதமும், ஸ்ட்ரைக் ரேட் 140 என்ற அளவில் இருந்தது. இது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.

இந்த நிலையில் கான்வேக்கு தற்போது காயம் ஏற்பட்டிருப்பதால் அவர் ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே மாதம் தான் அவர் விளையாடுவார். இதன் காரணமாக கான்வேவை நீக்கி விட்டு மாற்றுவீரரை எடுத்துக் கொள்ளலாம் என்று பேச்சு அடிபடுகிறது. ஆனால் அதற்கு தேவையே இல்லை.
ஏனென்றால் சிஎஸ்கே அணியில் ஏற்கனவே ரெடிமேடாக மூன்று வீரர்கள் இருக்கிறார்கள். கான்வே மே மாதம் வந்து விடுவார் என்பதால் மாற்று வீரர் தேவையில்லை. இந்த நிலையில் கான்வேக்கு பதில் எந்த வீரர்கள் அந்த இடத்திற்கு சரியாக இருப்பார்கள் என்பதை தற்போது பார்க்கலாம். நியூசிலாந்தை சேர்ந்த டேரல் மிச்செல் 14 கோடி ரூபாய் பணம் கொடுத்து சிஎஸ்கே வால் எடுக்கப்பட்ட வீரர் ஆவார். காண்வே போல் டேரல் மிச்செல் அதிரடியாக விளையாடக்கூடிய வீரர் ஆவார்.
மேலும் அவரால் சுழற் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்ள முடியும். தொடக்க வீரராகவும் அவரால் நிச்சயம் ஜொலிக்க முடியும். இதனால் கான்வேக்கு சரியான மாற்றாக டேரல் மிட்செல் இருப்பார். இதேபோன்று இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் ரச்சின் ரவீந்திரா. கடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்காக தொடக்க வீரராக ரச்சின் ரவீந்திரா அபாரமாக விளையாடினார்.
இதனால் இயற்கையாகவே அவர் தொடக்க வீரராக களமிறங்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் ஜோடி செம சூப்பராக செட்டாகும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் ஷாயிக் ரசித்.அண்டர் 19 கிரிக்கெட் வீரரான இவர் ஒரு நல்ல ஃபீல்டராகவும் இருக்கிறார்.
பொறுமையாகவும் அதே சமயம் அதிரடியாகவும் ஆடி நிலைத்து நிற்கக்கூடிய பேட்ஸ்மேனாக ஷாயிக் ரசித் இருக்கிறார். இதேபோன்று இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் ரஹானே. ரகானே இதற்கு முன்பு பலமுறை தொடக்க வீரராக செயல்பட்டு இருக்கிறார் என்பதால் அவரையும் சிஎஸ்கே அணி பயன்படுத்தலாம்.