IPL 2024- சிஎஸ்கேவில் பென் ஸ்டோக்ஸ்க்கு மாற்று வீரர்கள் யார்? மினி ஏலத்தில் 4 பேரை குறிவைக்கும் தல
மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த ஏலத்திற்கு தயாராகும் வகையில் ஒவ்வொரு அணி நிர்வாகம் யாரை விடுவிப்பது யாரை வாங்குவது என்று திட்டம் போட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் விலை உயர்ந்த வெளிநாட்டு வீரரான பென் ஸ்டோக்ஸ் அடுத்த ஆண்டு சீசனில் விளையாட மாட்டேன் என்று அறிவித்திருக்கிறார். இதனால் அவரை விடுவிக்க சிஎஸ்கே அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

இதன் மூலம் சிஎஸ்கே அணிக்கு 16 கோடியே 25 லட்சம் ரூபாய் கிடைக்கும். இந்த நிலையில் இதனை வைத்துக்கொண்டு மினி ஏலத்தில் யாரை மாற்று வீரராக சிஎஸ்கே குறி வைக்கலாம் என்பதை தற்போது பார்க்கலாம்.இந்த மினி ஏலத்தில் கோடி கணக்கில் போகக்கூடிய வீரராக நியூசிலாந்து அணியின் ரச்சன் ரவீந்திரா இருக்கிறார். இந்த தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கிய அவர் பேட்ஸ்மேனாக 578 ரன்கள் குவித்திருக்கிறார்.
இதன் மூலம் 25 வயது ஆகுவதற்குள் அதிக ரன்கள் உலக கோப்பையில் அடித்த வீரர் என்ற பெருமையை ரச்சின் ரவீந்திரநா பெற்றிருக்கிறார். இந்திய ஆடுகளத்தில் நன்றாக விளையாடுவதால் ரச்சின் ரவீந்தரா சிஎஸ்கே அணிக்கு வந்தால் அவரை ஓபனிங் கூட பயன்படுத்தலாம்.
மேலும் அவரிடம் இருந்து குறைந்தபட்சம் இரண்டு ஓவர்களை சிஎஸ்கே வாங்கிக் கொள்ளலாம்.
இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடிக்க கூடியவர் நியூசிலாந்து வீரர் டேரல் மிச்செல், நடுவரிசையில் களமிறங்கி 552 ரன்களை நடப்பு உலக கோப்பை தொடரில் படைத்தார். மேலும் டேரல் மிச்செல் இரண்டு சதங்களையும் அடித்தார். அதிரடி வீரராக விளங்கக்கூடிய டேரல் மிச்சலுக்கும் சிஎஸ்கே குறி வைக்கலாம்.

இதேபோன்று இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் ஆப்கானிஸ்தான் வீரர் அஸ்மதுல்லா. ஆல்ரவுண்டரான இவர், ஸ்டோக்ஸ்க்கு சரியான மாற்றுவீராக இருப்பார்.நடப்பு உலகக் கோப்பை தொடரில் 353 ரன்களை குவித்த அஹ்மத்துல்லா வேக பந்துவீச்சில் ஏழு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.
இதேபோன்று சிஎஸ்கே அணி இந்த பட்டியலில் நான்காவது குறி வைத்திருப்பவர் இங்கிலாந்து அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் சாம் கரண். பஞ்சாப் அணி அவரை விடுவிக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. அப்படி விடுவிக்கப்பட்டால் சிஎஸ்கே அணி ஷாம் கரனை குறி வைத்து தேர்வு செய்யும்.


Click it and Unblock the Notifications