For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2024 - சிஎஸ்கே அணியில் இருக்கும் 4 குறைகள்.. சரி செய்வாரா தல தோனி

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இம்முறை ஆறாவது முறையாக கோப்பையை வாங்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி ஏற்கனவே சென்னையில் தங்களுடைய பயிற்சி முகாமை தொடங்கியிருக்கிறது.

இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சில குறைகள் இருக்கிறது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம். சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் கான்வே தற்போது காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகி இருக்கிறார்.

IPL 2024 - 4 Weakness for Chennai super kings in this season


கான்வே விலகி இருப்பது சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திருக்கிறது. ஏனென்றால் ருதுராஜ் உடன் இணைந்து அவர் நல்ல பாட்னர்ஷிப்பை தொடக்கத்தில் ஏற்படுத்திக் கொடுப்பார். தற்போது அவர் இல்லாதது சிஎஸ்கே வின் குறையாக பார்க்கப்படுகிறது. இதே போன்று கடந்த முறை சிஎஸ்கே அணி வெற்றி பெற்றதற்கு பதிராணா முக்கிய காரணமாக இருந்தார்.

இந்த நிலையில் சீசன் தொடங்குவதற்கு முன்பு பதிரானா காயமடைந்து இருக்கிறார். இதனால் அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவாரா என்ற சந்தேகம் இருந்துள்ளது. இது சிஎஸ்கேவுக்கு பெரிய மைனஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே அணியில் நடு வரிசையில் ராயுடு ஒரு நல்ல பேட்ஸ்மனாக அணிக்காக உழைத்து வந்தார். தற்போது அவர் ஓய்வு பெற்றிருக்கும் நிலையில் அவரைப் போல ஒரு அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் தற்போது அணியில் இல்லை.

எனினும் இளம் வீரர்கள் அதிகம் சிஎஸ்கேவில் தற்போது தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், ராயுடு போல் அவர்கள் விளையாடுவார்களா என்பது கேள்விக்குறிதான். இதேபோன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி காயத்திலிருந்து தற்போது திரும்பி இருக்கிறார்.

அவர் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் இந்த 12 மாதங்களில் விளையாடவில்லை. இதனால் மேட்ச் பிராக்டிஸ் இல்லாமல் இம்முறை அவர் எப்படி விளையாடுவார் என்ற சந்தேகம் இருக்கிறது. மேலும் அவருடைய வயதும் தற்போது 42 ஆகிவிட்டதால் பழைய தோனியை பேட்டிங்கில் பார்க்க முடியுமா என்ற சந்தேகம் நிலவுகிறது.

Story first published: Tuesday, March 12, 2024, 17:30 [IST]
Other articles published on Mar 12, 2024
English summary
IPL 2024 - 4 Weakness for Chennai super kings in this season
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+