Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சும்மா வதந்தி கிளப்புறாங்க.. ஆஃப்கானிஸ்தான் தொடருக்கு தயாரான டி20 கேப்டன்.. வெளியான பரபர தகவல்!

மும்பை: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விளையாடுவார் என்று தெரிய வந்துள்ளது.

உலகக்கோப்பை தொடரின் போது இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காலில் ஏற்பட்டது. அதன்பின் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகிய ஹர்திக் பாண்டியா, அதன்பின் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரிலும் விளையாடவில்லை. காயம் காரணமாக 3 தொடர்களையும் தவறவிட்டார்.

IPL 2024 : As Per Souces Hardik Pandya is fit and fine and He will ready for the Afghanistan T20 Series

இந்த நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தரப்பில், ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா களமிறங்க வாய்ப்புகள் இருப்பதாகவும், அதற்குள் அவர் முழு ஃபிட்னஸையும் எட்டுவார் என்றும் தெரிவித்தார். ஆனால் நேற்று ஹர்திக் பாண்டியா காயம் குணமடைய கூடுதல் நேரம் பிடிக்கும் என்றும், ஐபிஎல் தொடரிலும் பங்கேற்க வாய்ப்பில்லை என்றும் தகவல் வெளியாகியது.

இதனால் மும்பை அணி ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால் குஜராத் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை கொண்டு வந்ததுடன், ரோகித் சர்மாவை கேப்டன்சியில் இருந்து நீக்கி, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டார். தற்போது ஹர்திக் பாண்டியா விலகினால், யார் கேப்டனாக செயல்படுவார்கள் என்று குழம்பினர்.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவின் ஃபிட்னஸ் குறித்து அவரின் நெருங்கிய நட்பில் இருப்பவர்கள் சில தகவல் வெளியிட்டுள்ளனர். அதில், ஹர்திக் பாண்டியா கிட்டத்தட்ட முழு ஃபிட்னஸையும் எட்டிவிட்டார். ஒவ்வொரு நாளும் தீவிரமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஐபிஎல் தொடரில் அவர் விளையாடுவது சந்தேகம் என்று வரும் செய்திகள் அனைத்தும் வதந்தியே.

ஐபிஎல் தொடருக்கு இன்னும் 4 மாதங்கள் இருக்கும் சூழலில், ஹர்திக் பாண்டியா முன்னதாக தயாராகிவிடுவார். விரைவில் அவர் முழு ஃபிட்னஸையும் எட்டிய பின், ஐபிஎல் தொடரில் களமிறங்குவார். அதேபோல் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா களமிறங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆஃப்கானிஸ்தான் டி20 தொடரில் இருந்து சூர்யகுமார் யாதவ் ஏற்கனவே விலகிவிட்டார். ஒருவேளை ஆஃப்கானிஸ்தான் டி20 தொடருக்கு முன் ஹர்திக் பாண்டியா முழு ஃபிட்னஸையும் எட்டவில்லை என்றால், இந்திய அணியை வழிநடத்த ரோகித் சர்மாவிடம் கேட்டு கொள்ளப்படும். அதனால் இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கேப்டனுக்கான ரேஸில் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.

Story first published: Sunday, December 24, 2023, 11:08 [IST]
Other articles published on Dec 24, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+