Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2024 - மும்பை வெறித்தனமா இருக்காங்க..சிஎஸ்கே ஜெய்ச்சா போதும் பொறுக்க முடியாது.. அஸ்வின் பேச்சு

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 17வது சீசன் வரும் மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த ஏலத்திற்கு அனைத்து அணி வீரர்களும் தயார் நிலையில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் மும்பை அணியை பொறுத்தவரை ஏலத்திற்கு முன்பே ஹர்திக் பாண்டியாவை வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து குஜராத் அணியும் கொல்கத்தா அணியும் வெளிப்படையாகவே விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார்கள்.

R Ashwin on MI

இந்த நிலையில் மும்பை அணி சிஎஸ்கேவை சேர்ந்த மதீஸா பதிராணாவை விலைக்கு வாங்க முயற்சி எடுத்திருக்கிறது. ஆனால் அவர் சிஎஸ்கே மீதான விசுவாசத்தால் முடியாது என்று கூறிவிட்டார் என்று செய்திகள் வெளியானது. இதேபோன்று டெல்லி அணியிடம் குல்தீப் யாதவை மும்பை அணி நிர்வாகம் கேட்டிருப்பதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் ஐபிஎல் மினி ஏலம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அஸ்வின் மும்பை அணி இம்முறை வெறித்தனமாக ஐபிஎல் தொடரை அணுகி வருவதாக கூறியுள்ளார். இது குறித்து பேசிய அஸ்வின் மும்பையும் சென்னையும் தற்போது 5 பட்டங்களை கைப்பற்றி இருக்கிறார்கள். மும்பை அணி எவ்வாறு ப்ளான் செய்யும் என்பது குறித்து எனக்கு நண்பர் ஒருவர் கூறினார்.

அதில் சிஎஸ்கே ஒரு பட்டத்தை வென்று விட்டால் அடுத்த இரண்டு பட்டங்களை எப்படியாவது நாம் வென்று சிஎஸ்கே வை விட முன்னிலையில் இருக்க வேண்டும் என்று தான் மும்பை அணி படுத்தீவிரமாக யோசிக்கும் என்று கூறியுள்ளார். ஒருமுறை பஞ்சாப் அணியில் இருந்த போது டேவிட் மில்லரை தங்களுக்கு தாருங்கள் என மும்பை அணி கேட்டதாகவும்

அதற்கு நீங்கள் பதிலுக்கு எந்த விதவை கொடுக்க போகிறீர்கள் என்று கூறியதற்கு பதிலுக்கு வீரர்கள் எல்லாம் தரமாட்டோம் உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று மும்பை அணி நிர்வாகம் கேட்டதாக அஸ்வின் தனது வீடியோவில் கூறி இருக்கிறார். அஸ்வினின் இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் மும்பை அணி மீது ரசிகர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Story first published: Wednesday, December 13, 2023, 6:01 [IST]
Other articles published on Dec 13, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+