ரிஷப் பண்ட் கிட்ட கடைசியா எப்ப பேசுன? அதிகாலை வந்த போன்கால்... கதிகலங்கிப் போன அக்சர் பட்டேல்
மும்பை : 2023ஆம் ஆண்டு துவக்கத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு சம்பவம் நடந்தது. இந்திய அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் மோசமான வி.பத்தில் சிக்கினார்.
ரிஷப் பண்ட் காருக்கு ஏற்பட்ட நிலையை பார்த்தே பலரும் கதிகலங்கிப் போனார்கள். இந்த நிலையில், அப்போது அக்சர் பட்டேல் என்ன மனநிலையில் இருந்தார் என்பது பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் 30 அன்று அதிகாலை ரிஷப் பண்ட் ஓட்டிச் சென்ற மெர்சிடஸ் கார் சாலை தடுப்பில் மோதி பறந்து சென்று ஒரு பக்கமாக சாய்ந்து கீழே விழுந்தது. இதற்கிடையே ரிஷப் பண்ட் போராடி வெளியே வந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ரிஷப் பண்ட் விபத்து நடந்த அன்று காலை அக்சர் பட்டேலின் சகோதரி பிரதிமா, அவருக்கு போன் செய்து, ரிஷப் பண்ட்டிடம் எப்போது கடைசியாக பேசினாய்? என கேட்டு இருக்கிறார். அதற்கு அக்சர் பட்டேல், தான் நேற்று இரவு பேச வேண்டும் என நினைத்தேன். ஆனால் பேசவில்லை என கூறி இருக்கிறார்,
அப்போது ப்ரதிமா, பண்ட்டுக்கு மோசமான விபத்து நடந்த விஷயத்தை அவரிடம் கூறி, பண்ட்டின் தாய் போன் நம்பரை கொடு என கேட்டு இருக்கிறார். அப்போது தான் தனக்கு அக்சருக்கு விபத்து நடந்த விஷயம் தெரிய வந்தது எனவும், அது மட்டுமின்றி, பெரிய விபத்து என்பதால் அவர் உயிரிழந்து விட்டார் என்றே தான் எண்ணியதாகவும் இந்தப் பேட்டியில் கூறி இருக்கிறார் அக்சர் பட்டேல்.
ரிஷப் பண்ட்டுக்கு விபத்து நடந்து ஓராண்டு முடிந்துள்ள நிலையில், அவர் 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்பார் என கூறப்பட்டு வருகிறது. எனினும், அவர் இன்னும் முழு உடற்தகுதி பெறவில்லை. அவர் ஐபிஎல் தொடரில் ஆடவில்லை என்றால் 2024 டி20 உலகக்கோப்பை தொடரிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும். அவரது ஐபிஎல் அணியான டெல்லி கேபிடல்ஸ் அணி அவர் மீது நம்பிக்கையுடன் உள்ளது. அவர் 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்றால் அவரை கேப்டனாக செயல்பட வைக்கவும் முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே ரிஷப் பண்ட் வேறு ஐபிஎல் அணிக்கு தாவப் போகிறார் என்று வந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் டெல்லி கேபிடல்ஸ் அணி அவரை 2024 ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்க வைத்தது. டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், ஆலோசகர் சவுரவ் கங்குலி ஆகியோருடன் ரிஷப் பண்ட்டும் வீரர்களை ஏலத்தில் வாங்குவதில் பங்காற்றினார்.


Click it and Unblock the Notifications