For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL - சிஎஸ்கேவில் களமிறங்கிய வங்கதேச புலி.. நேற்று காயமடைந்த நிலையில், இன்று சென்னைக்கு வந்தார்

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் வரும் 22 ஆம் தேதி ஆர் சி பி அணியை எதிர்கொள்கிறது. இந்த தொடருக்கு தயாராகும் விதமாக சென்னையில் முகாமிட்டுள்ள சிஎஸ்கே வீரர்கள் கடும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் வீரர்களுக்கு தொடர்ந்து காயம் ஏற்பட்டு வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஏற்கனவே சி எஸ் கே அணியின் நட்சத்திர தொடக்க வீரர் நியூசிலாந்தைச் சேர்ந்த கான்வேக்கு காயம் ஏற்பட்டது.

IPL 2024 - Bangladesh cricketer Mustafizur Rahman confirms his availability to play for CSK

இந்த சீசனில் ஒரு மாதம் கான்வே விளையாட மாட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படி இருக்க சிஎஸ்கே அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பதிராணாவுக்கும் காயம் ஏற்பட்டிருப்பது, சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இது போதாது என சிஎஸ்கே அணி இடம் பெற்று இருக்கும் வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தஃபூர் ரஹ்மானுக்கும் நேற்று காயம் ஏற்பட்டது.

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முஸ்தஃபீசுர் ரஹ்மான் ஒன்பது ஓவர்களை வீசி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி 39 ரன்களை விட்டுக் கொடுத்தார். இந்த நிலையில் காயத்தால் அவர் போட்டியில் இருந்து பாதியில் விலகினார். இதனால் முஸ்தஃபிசுர் ரஹ்மான், சி எஸ் கே அணியில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் இருந்தது.

சிஎஸ்கே வில் உள்ள இரண்டு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்களுக்குமே காயம் ஏற்பட்டதால் சிஎஸ்கே அணி எப்படி கோப்பையை வெல்லும் என்ற கவலை ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்த நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் முஸ்தஃபிசுர் ரஹ்மான் தற்போது சென்னை புறப்பட்டு வருகிறார். நேற்று முஸ்தஃபிசுர் ரஹ்மானால் நடக்கவே முடியாத நிலையில் ஸ்ட்ரக்சரில் தூக்கி சென்றனர்.

இதனால் இந்த சீசனில் அவர் பங்கேற்க மாட்டார் என்று சிஎஸ்கே ரசிகர்கள் முடிவு எடுத்த நிலையில் தற்போது அவர் தாம் சிஎஸ்கே போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை புறப்பட்டு செல்வதாகவும் தான் இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டுமென ரசிகர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும். உங்களுடைய ஆதரவு எனக்கு முக்கியம் என்றும் கூறியிருக்கிறார். இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு செம சர்பரைஸ் ஆக அமைந்திருக்கிறது. இதனால் முதலில் சி எஸ் கே வின் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, March 19, 2024, 15:49 [IST]
Other articles published on Mar 19, 2024
English summary
IPL 2024 - Bangladesh cricketer Mustafizur Rahman confirms his availability to play for CSK சிஎஸ்கேவில் களமிறங்கிய வங்கதேச புலி.. நேற்று காயமடைந்த நிலையில், இன்று சென்னைக்கு வந்தார்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+