For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2024 : ஐபிஎல்-இல் கோலி, ரோஹித் உட்பட 30 இந்திய வீரர்களுக்கு செக்.. பிசிசிஐ கண்காணிக்க முடிவு

மும்பை : இந்திய அணியின் 30 வீரர்களை கண்காணிப்பு வளையத்தில் வைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரும் விதிவிலக்கல்ல.

2024 டி20 உலகக்கோப்பை வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. அதற்கு முன் இந்திய அணி ஒரே ஒரு டி20 தொடரில் மட்டுமே ஆட உள்ளது. அடுத்த வாரம் துவங்க உள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடர் தான் உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்திய அணியின் கடைசி சர்வதேச டி20 தொடர்.

IPL 2024 : BCCI closely watches players ahead of T20 World Cup 2024, including Rohit Sharma and Virat Kohli.

அதன் பின் இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளது. அதற்கு அடுத்ததாக ஐபிஎல் தொடர் துவங்கும். ஐபிஎல் தொடர் முடிந்த சில நாட்களில் 2024 டி20 உலகக்கோப்பை தொடர் துவங்கும். இப்படி சிக்கலான அட்டவணையில் இந்திய வீரர்கள் செயல்பட உள்ளனர்.

இதற்கிடையே டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியை பிசிசிஐ தயார் செய்ய வேண்டும். இந்திய அணி ஜனவரி மூன்றாவது வாரம் முதல் டி20 உலகக்கோப்பை துவங்க உள்ள ஜூன் மாதம் வரை எந்த டி20 தொடரிலும் ஆடாத நிலையில் ஐபிஎல் தொடரில் வீரர்களின் செயல்பாட்டை வைத்தே டி20 அணியை அறிவிக்க உள்ளது.

ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு காயம் ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில், பும்ரா ஆகியோர் டி20 அணியில் முக்கிய வீரர்களாக கருதப்படுகிறார்கள். மேலும், தற்போது காயத்தில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் ஆகியோர் ஐபிஎல் தொடரில் எப்படி ஆடுகிறார்கள் என்பதை வைத்தே அவர்களை தேர்வு செய்வது குறித்து பிசிசிஐ யோசிக்க முடியும்.

எனவே, டி20 அணியில் இடம் பெற தகுதி உடைய 30 வீரர்களின் செயல்பாட்டை ஐபிஎல் தொடரின் போது தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்துள்ளது பிசிசிஐ. இதில் அவர்களின் உடற்தகுதி,
ஃபார்ம் என எல்லாவற்றையும் கருத்தில் கொண்டே அவர்கள் டி20 அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

Story first published: Wednesday, January 3, 2024, 10:16 [IST]
Other articles published on Jan 3, 2024
English summary
IPL 2024 : BCCI closely watches players ahead of T20 World Cup 2024, including Rohit Sharma and Virat Kohli.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+