Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி செய்த மெகா தவறு.. உங்களை நம்பிய ரசிகர்களுக்கு இப்படி செய்யலாமா? கையில் இருந்த வாய்ப்பு போச்சு

பெங்களூர் : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறிவிட்டது. ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் குறைந்தபட்சம் தோற்று இருந்தால் பிளே ஆப் சுற்றுக்கு சென்று இருக்கலாம்.

ஆனால் சிஎஸ்கே அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறிவிட்டது. இந்த போட்டியில் தோனி செய்த ஒரு பெரிய தவறுதான் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணமாக இருப்பதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

IPL 2024 -Big mistake of MS Dhoni made csk losing important match for RCB

இந்த போட்டியில் சிஎஸ்கே அணி ஆரம்பத்தில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து சொதப்பினாலும் ரஹானே, ரச்சின் ரவீந்திரா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தது. அதன் பிறகு சீரான இடைவெளியில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்தது. 119 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகள் இழந்த நிலையில், மிச்சம் ஏழு ஓவர் இருந்தது.

இந்த சூழலில் தோனி களத்தில் இறங்கி விளையாடி இருந்தால் நிச்சயம் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றிருக்கும். ஆனால் தோனி அப்போது பேட்டிங் செய்ய வராமல் மிச்செல் சான்ட்னரை களம் இறக்கினார். அவர் நான்கு பந்துகளை எதிர் கொண்டு வெறும் மூன்று ரன்கள் மட்டும் தான் எடுத்தார். இதனால் மிச்செல் சாண்ட்னரை களம் இறக்கியது எந்தப் பயனையும் சிஎஸ்கேவுக்கு தரவில்லை.

இந்த சூழலில் தோனி களமிறங்க இருந்தால் அது சிஎஸ்கே அணிக்கு சாதகமாக அமைந்திருக்கும். இன்னும் ரசிகர்கள் ரஹானே ஆட்டமிழந்த போது தோனி தான் களத்திற்கு வந்திருக்க வேண்டும் என்றும், ஆனால் சிவம் துபேக்கு வாய்ப்பு கொடுத்ததாகவும் குறை கூறுகிறார்கள். குறைந்தபட்சம் 7 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில் தோனி களத்திற்கு வந்திருந்தால் மற்ற வீரர்களுக்காவது நம்பிக்கை ஏற்பட்டிருக்கும்.

தோனி 15 ஓவர்கள் முடிந்த பிறகு தான் களத்திற்கு வந்து 13 ஓவர்களில் 25 ரன்கள் சேர்த்து இருந்தார். அதே தோனி 13.4 வது ஓவரில் வந்திருந்தால் ப்ளே ஆஃப் தேவையான 10 ரன்களை முன்பே அடித்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் கூறியுள்ளனர். இந்த சீசனில் தோனி நல்ல பார்மில் இருந்தாலும், தொடர்ந்து கடைசி கட்டத்தில் களம் இறங்கியது சிஎஸ்கே வின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்து விட்டதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Story first published: Sunday, May 19, 2024, 8:40 [IST]
Other articles published on May 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+