Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மாயங் யாதவ்க்கு பெரிய பிரச்சினை இருக்கு.. நீண்ட நாள் வேகமாக பந்துவீச முடியாது.. காரணம் என்ன?

லக்னோ : கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எப்போதுமே ஒரு தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். கையில் பந்தை வைத்துக் கொண்டு ஓடி அவர்கள் வீசும் வேகம் பேட்ஸ்மேன்களின் காலை பரதநாட்டியம் ஆட வைக்கும். அந்த வகையில் கிரிக்கெட் உலகில் பல அபாயகரமான வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.

பொதுவாக ஒரு மனிதர்களால் மணிக்கு சராசரியாக 140 கிலோ மீட்டருக்கு மேல் பந்து வீசுவது கடினம். இதனை ஒரு சிலர்தான் செய்து வருகிறார்கள். ஒரு சிலர் 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பந்து வீசி இருக்கிறார்கள்.

IPL 2024 - Big Problem for Mayank yadav as He faced so many injuries


ஆனால் அவர்களுக்கு எல்லாம் ஒரு பிரச்சனை இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக பந்து வீசியவர் ஆஸ்திரேலிய வீரர் ஷான் டைட். அவர் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி இருக்கிறார். ஆனால் அவரால் சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அளவு ஜொலிக்க முடியவில்லை. காரணம் அவருக்கு ஏற்பட்ட காயம்தான்.

உடல் தகுதியை மீறி வேகமாக பந்து வீசும் போது சான் டைட்டுக்கு தொடர்ந்து விளையாட முடியாமல் போனது. தற்போது இதே பிரச்சனை தான் மாயங் யாதவிற்கும் இருக்கிறது. 21 வயதான இவர் 150 கிலோ மீட்டருக்கு மேல் பந்து வீசுகிறார் என்று கிரிக்கெட்டில் உள்ள பலருக்கும் ஏற்கனவே தெரிந்த விஷயம்தான். காரணம் அவர் விளையாடிய லோக்கல் போட்டிகளில் தன்னுடைய வேக பந்துவீச்சை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.

இப்படி ஒரு வீரர் சிறப்பாக பந்து வீசுகிறார் என்று ரிஷப் பந்து தான் தமக்கு தெரிந்தவர்களிடம் சொல்லி பிரபலப்படுத்தி இருக்கிறார். அதன் விரைவாக தான் தற்போது லக்னோ அணி அவரை பயன்படுத்தியிருக்கிறது. எனினும் மாயங் யாதவுக்கு 20 வயது தான். இருந்தாலும் அவருக்கு இதுவரை மூன்று முறை காயம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு முழு சீசனிலும் காயம் ஏற்பட்டதால் அவரால் விளையாட முடியாமல் போனது.

அந்த காயத்திலிருந்து மீண்டு 2023 ஆம் ஆண்டு விளையாடிய போது மீண்டும் மாயங் யாதவுக்கு காயம் ஏற்பட்டு ஒரு ஆண்டு முழுவதும் விளையாட முடியாமல் போனது. இப்படி அடிக்கடி காயம் ஏற்பட்டு வரும் மாயங் யாதவ் அதிலிருந்து மீண்டு தொடர்ந்து ஒரே மாதிரி பந்து வீசுவது என்பது முடியாத காரியம். இதனால்தான் சிஎஸ்கே போன்ற அணிகள் அவரை தேர்ந்தெடுக்காமல் போனது.

அதனை மீறி அவர் பந்து வீசினாலும் தொடர்ந்து அவரால் 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு பந்து வீச இயலாது. எப்படி பும்ரா, முகமது சமி போன்ற வீரர்கள் இந்தியாவுக்காக இத்தனை ஆண்டுகள் விளையாடுகிறார்களோ, அதுபோல் ஒரு நிலை மாயங்கிற்கு ஏற்படாது என்பதுதான் சோகமான விஷயம். மேலும் வேகப்பந்துவீச்சாளர்கள் உடல் தகுதியை மெருகேற்ற வேண்டுமென்றால், அது ஆட்டுக்கறி போன்ற அசைவ உணவுகளில் இருந்து தான் கிடைக்கும். சைவ உணவு சாப்பிடும் வீரர்கள் அதிவேகமாக பந்து வீசினாலும் அவர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படும்.

இதனால் பல வீரர்கள் தங்களுடைய கிரிக்கெட்டுக்காக அசைவ உணவுகளை சாப்பிட்டு வந்திருக்கிறார்கள். ஆனால் சிறுவயதில் இருந்து தூய சைவ உணவுகளை மட்டும் தான் மாயங் யாதவ் சாப்பிட்டு வருகிறார். இதன் காரணமாக தான் அவருக்கு புரதச்சத்துக்கள் கிடைக்காமல் அடிக்கடி காயம் அடைந்து விடுகிறார் என்று கூறப்படுகிறது. இதனால் மாயங், தமக்கு இருக்கும் குறைகளை மாற்றி தொடர்ந்து இவ்வளவு வேகமாக வீசுவரா இல்லை வருண் அரோண் போன்ற வீரர்கள் போல் காணாமல் போய்விடுவாரா என்பது தான் தற்போது கேள்வியாக இருக்கிறது.

Story first published: Sunday, March 31, 2024, 18:37 [IST]
Other articles published on Mar 31, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+