Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. ஆப்கன் வீரருக்கு குறி வைக்கும் சிஎஸ்கே.. தோனி கையில் முடிவு

சென்னை : 2024 ஐபிஎல் மினி ஏலத்தில் ஆப்கானிஸ்தான் ஆல் - ரவுண்டர் ஹஸ்மத்துல்லா ஓமர்சாய்-ஐ சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்க முயற்சி செய்யும். சிஎஸ்கே அணியின் விருப்பமான வீரர்கள் பட்டியலில் அவர் பெயரும் உள்ளதாக கூறப்படுகிறது.

சிஎஸ்கே அணியில் வெளிநாட்டு வீரரான பென் ஸ்டோக்ஸ் 2024 ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இருக்கிறார். அதனால், அவருக்கு இணையான ஆல் - ரவுண்டர் ஒருவர் அந்த அணிக்கு தேவை.

IPL 2024 : Chennai Super Kings and MS Dhoni may buy Azmatullah Omarzai in IPL mini auction 2024.

பென் ஸ்டோக்ஸ் வேகப் பந்துவீசும் பேட்ஸ்மேன் என்பதால் அதே போன்ற ஒரு வீரரை தேடுவது கடினமான காரியம். இந்தியாவில் கூட ஹர்திக் பாண்டியாவை விட்டால் ஒன்று, இரண்டு வீரர்கள் தான் உள்ளனர். அவர்களின் ஃபார்மும் மோசமாகவே உள்ளது. சிஎஸ்கே அணியிலேயே சிவம் துபே இருக்கிறார். அவரும் வேகப் பந்துவீசும் பேட்ஸ்மேன் தான். ஆனால், சமீபத்தில் அவரது ஃபார்ம் மோசமாகவே உள்ளது.

இந்த நிலையில் நல்ல ஃபார்மில் இருக்கும் ஆப்கானிஸ்தான் அணி ஆல் - ரவுண்டர் ஹஸ்மத்துல்லா ஓமர்சாய் சிஎஸ்கே அணியை ஈர்த்து இருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் அவர் 9 போட்டிகளில் 350 ரன்களுக்கும் மேல் குவித்து, 7 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். பேட்டிங், பவுலிங் இரண்டிலும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

சிஎஸ்கே அணியில் பென் ஸ்டோக்ஸ் இடத்துக்கு இவர் சரியான ஆளாக இருப்பார் என்பதால் சிஎஸ்கே அணி ஏலத்தில் அவரை வாங்க முயற்சி செய்யும். மற்ற அணிகளும் ஓமர்சாயை வாங்க போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், சிஎஸ்கே அணியிடம் இருக்கும் பணத்தை பொறுத்தே அவரை வாங்கும் முயற்சி அமையும்.

சிஎஸ்கே அணிக்கு வேகப் பந்துவீச்சாளர்கள் தேவையும் உள்ளது. ஓமர்சாய் சிஎஸ்கே அணிக்கு வந்தால் பகுதி நேர வேகப் பந்துவீச்சாளராக இருப்பார். தோனி ஓமர்சாயை விரும்பினால் நிச்சயம் சிஎஸ்கே அணி அதிக தொகை கொடுத்து கூட அவரை அணியில் சேர்த்துவிடும்.

Story first published: Sunday, December 3, 2023, 16:24 [IST]
Other articles published on Dec 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+