Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2024 : சிஎஸ்கே அணிக்கு அடித்த ஜாக்பாட்.. பாண்டியாவால் 2ஆம் இடத்துக்கு சரிந்த மும்பை இந்தியன்ஸ்

சென்னை : 2024 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது.

IPL 2024 : Chennai Super Kings beat Mumbai Indians in winning more fans

சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்களால் பின்பற்றப்படும் ஐபிஎல் அணியாக மாறி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே). சமூக வலைதளங்களில் ஐபிஎல் அணிக்கு இருக்கும் ரசிகர்கள் எண்ணிக்கை கூடினால் விளம்பர வருவாயும் அதிகரிக்கும். அந்த வகையில் சிஎஸ்கே அணிக்கு பெரிய ஜாக்பாட் அடித்து இருக்கிறது.

2024 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சிஎஸ்கே அணி இந்த சாதனையை தனதாக்கி உள்ளது. இதற்கு முக்கிய காரணம், திடீரென அதிக ரசிகர்கள் சிஎஸ்கே அணியை பின்பற்றத் தொடங்கியது அல்ல. மாறாக சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்களை கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி சில மணி நேரங்களில் சுமார் 5 லட்சம் ரசிகர்களை இழந்தது தான் காரணம்.

மும்பை இந்தியன்ஸ் அணி 2024 ஐபிஎல் தொடரின் கேப்டனாக ஹர்திக் பண்டியாவை நியமித்து இருக்கிறது. சுமார் 10 ஆண்டுகள் மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த மாற்றத்தை அந்த அணியின் பெரும்பாலான ரசிகர்கள் ஏற்கவில்லை. தங்கள் கோபத்தை வெளிக் காட்ட வேண்டி அந்த அணியில் இருந்து விலகி இருக்கிறார்கள்.

இதை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராமில் 1.32 கோடியாக இருந்த பின்பற்றும் ரசிகர்கள் எண்ணிக்கை, 1.27 கோடியாக குறைந்துள்ளது. ஒரே நாளில் 5 லட்சம் ரசிகர்கள் விலகியது தான் இதற்கு காரணம். இப்போதும் நிறைய ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியை பின்பற்றுவதில் இருந்து விலகி வருகின்றனர். ட்விட்டரில் சுமார் 1.5 லட்சம் ரசிகர்கள் விலகிய நிலையில் 82 லட்சம் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

சிஎஸ்கே அணிக்கு தற்போது இன்ஸ்டாகிராமில் 1.3 கோடி ரசிகர்கள் உள்ளனர். ட்விட்டரில் 1.01 கோடி ரசிகர்கள் உள்ளனர். இதை அடுத்து சிஎஸ்கே அணி சமூக வலைதளங்களில் அதிகம் பின்தொடரப்படும் ஐபிஎல் அணியாக மாறி உள்ளது. சிஎஸ்கே அணிக்கு ரசிகர்கள் கூடவில்லை என்றாலும் தற்போது அதிக ரசிகர்களை கொண்ட அணி என்பதால் கூடுதல் விளம்பர வருவாயை பேரம் பேசி பெற முடியும். இது ஒரு ஆரம்பம் தான்.

மும்பை இந்தியன்ஸ் அணி சமூக வலைதளங்களில் இரண்டாம் இடத்துக்கு சென்றுள்ளது. 2024 ஐபிஎல் தொடரில் அந்த அணியின் செயல்பாட்டை பொறுத்தே இனி ரசிகர்கள் எண்ணிக்கை கூடுமா? மேலும் குறையுமா? என்பது தெரிய வரும்.

Story first published: Saturday, December 16, 2023, 15:18 [IST]
Other articles published on Dec 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+