தோனியின் செல்லப் பிள்ளைக்கு நேர்ந்த கதி.. சிஎஸ்கே ரசிகர்களை கதிகலங்க வைத்த பதிரானா
சென்னை : 2023 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் தோனியின் செல்லப் பிள்ளையாக இருந்தவர் மதீஷா பதிரானா. லசித் மலிங்கா போலவே பந்து வீசிய அவரை பட்டை தீட்டிய கேப்டன் தோனி, அணியின் முதன்மை வேகப் பந்துவீச்சாளராக அவரை மாற்றினார்.
2024 ஐபிஎல் தொடர் இன்னும் சில தினங்களில் துவங்க இருக்கும் நிலையில் பதிரானா, இலங்கை அணியில் இடம் பெற்று வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் ஆடி வருகிறார். இந்த தொடரின் முதல் போட்டியில் பதிரானா பந்துவீச்சில் செய்த சொதப்பல் காரணமாக இலங்கை ரசிகர்கள் மட்டுமின்றி சிஎஸ்கே ரசிகர்களும் கதிகலங்கி போய் இருக்கிறார்கள்.

முதல் டி20 போட்டியில் பதிரானா 9 வைடு மற்றும் 3 நோ பால் வீசி இருக்கிறார். அதாவது ஒரு டி20 போட்டியில் 4 ஓவர்களில் 24 பந்துகள் வீச வேண்டிய நிலையில் அவர் 36 பந்துகள் வீசி அதிர வைத்துள்ளார். அந்த வைடுகள், நோ பால் மூலம் 12 ரன்கள் விட்டுக் கொடுத்தது மட்டுமின்றி அந்த 12 பந்துகளிலும் சில ரன்கள் கொடுக்கப்பட்டது. 4 ஓவர்களில் 56 ரன்கள் விட்டுக் கொடுத்து இருந்தார் பதிரானா.
இந்தப் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 206 ரன்கள் குவித்தது. அடுத்து பேட்டிங் செய்த வங்கதேச அணி 68 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருந்தது. பதிரானா தனது முதல் ஓவரில் 2 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
ஆனால், அதன் பின் பதற்றமடைந்த அவர் தொடர்ந்து வைடு பந்துகளாக வீசி வங்கதேச அணிக்கு அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார். இதை அடுத்து வங்கதேச அணி கடைசி ஓவரில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு சென்றது. அதன் பின் இலங்கை பந்துவீச்சாளர் ஷனகா கடைசி ஓவரில் 2 விக்கெட்கள் வீழ்த்தி ரன் 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 ரன் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற காரணமாக இருந்தார்.
பதிரானா இதே ஃபார்மில் 2024 ஐபிஎல் தொடரில் விளையாட வந்தால் சிஎஸ்கே அணியின் கதை முடிந்து விடும் என அந்த அணியின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் புலம்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications