Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன்கள் பட்டியலையும் அவர்களின் செயல்பாட்டையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே தோனி ஏன் தொடர்ந்து சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் ரவீந்திர ஜடேஜா என மூன்று வீரர்கள் கேப்டனாக இருந்துள்ளனர். இவர்களில் தோனியை தவிர மற்ற இருவரும் 10 போட்டிகளுக்கு கூட கேப்டனாக செயல்படவில்லை என்பது தான் சோகம்.

IPL 2024 Chennai Super Kings captains list shows why MS Dhoni is still leading the CSK team


2008இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உருவாக்கப்பட்டது முதல் 2022 வரை அந்த அணியின் நிரந்தர, அதிகாரப்பூர்வ கேப்டனாக இருந்தவர் தோனி மட்டுமே. இடையே தோனி ஓய்வு எடுத்த சில போட்டிகளின் போது சுரேஷ் ரெய்னா கேப்டனாக பணியாற்றினார். அப்படி இதுவரை 6 போட்டிகளுக்கு சுரேஷ் ரெய்னா கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். அந்த ஆறில் இரண்டு வெற்றிகள், மூன்று தோல்விகள் மற்றும் ஒரு டை என சுரேஷ் ரெய்னாவின் கேப்டன்சி சராசரியாகவே இருந்தது.

2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது தோனி கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம் அளித்தார். அந்த தொடரின் முதல் 8 போட்டிகளுக்கு ஜடேஜா கேப்டனாக செயல்பட்டார். ஆனால் அதில் 2 வெற்றிகள் மற்றும் ஆறு தோல்விகளை சந்தித்தது சிஎஸ்கே அணி. அதன் பின் தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றார். 2023 ஐபிஎல் தொடரிலும் அவரே கேப்டனாக இருந்து சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக கோப்பை வென்று தந்தார்.

தோனி இதுவரை சிஎஸ்கே அணிக்கு 235 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். அதில் 142 வெற்றிகள், 90 தோல்விகள், ஒரு டை கிடைத்துள்ளன. கேப்டன் தோனியின் வெற்றி சராசரி 60.42 ஆகும். கேப்டனாக சுரேஷ் ரெய்னாவின் வெற்றி சதவீதம் 33.33 ஆகவும், ஜடேஜாவின் வெற்றி சதவீதம் 25 சதவீதமாகவும் உள்ளது.

சுரேஷ் ரெய்னா மற்றும் ரவீந்திர ஜடேஜா என இருவருமே தங்களுக்கு கிடைத்த வாய்ப்பில் கேப்டனாக சிறப்பாக செயல்படவில்லை என்பதாலேயே தோனி நீண்ட காலமாக சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருப்பது மட்டுமின்றி 42 வயதிலும் ஐபிஎல் தொடரில் ஆடிக் கொண்டு இருக்கிறார். தோனியால் இன்னும் எத்தனை ஆண்டுகள் தீவிரமாக கிரிக்கெட் ஆட முடியும் என்பது தெரியாத நிலையில், 2024 ஐபிஎல் தொடரிலாவது சிஎஸ்கே அணி தன் அடுத்த கேப்டனை அடையாளம் காண வேண்டும்.

Story first published: Monday, March 18, 2024, 22:27 [IST]
Other articles published on Mar 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+