Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2024 : சிஎஸ்கே-வின் டார்கெட் இந்த 6 வீரர்கள் தான்.. 3 ஆல் - ரவுண்டர், 2 பவுலர், 1 பேட்ஸ்மேன்

சென்னை : 2024 ஐபிஎல் மினி ஏலம் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த வீரர்களை ஏலத்தில் குறி வைக்க உள்ளது என்பது பற்றி சில தகவல்கள் வலம் வருகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தற்போது 31.40 கோடி கையிருப்பு உள்ளது. சிஎஸ்கே அணியில் ஆறு வீரர்களுக்கான இடங்கள் காலியாக உள்ளது. அதில் மூன்று இடம் வெளிநாட்டு வீரர்களுக்கானது.

அந்த வகையில் சிஎஸ்கே அணி 2024 ஐபிஎல் மினி ஏலத்தில் ஆறு வீரர்களை வாங்க வேண்டும். ஆறு வீரர்களை வாங்க வேண்டும் என்றால் சிஎஸ்கே அணி குறைந்தது 20 வீரர்களை குறி வைத்தால் தான் அதில் ஆறு வீரர்களை வாங்க முடியும். மற்ற அணிகளும் ஏலத்தில் கடும் போட்டி போடும் என்பதால் அதிக வீரர்களை இப்போதே தேர்வு செய்து வைத்துக் கொண்டால் மட்டுமே ஏலத்தில் தேவையான வீரர்களை வாங்க முடியும்.

IPL 2024 : Chennai Super Kings (CSK) will go for this six players in IPL mini auction 2024

சிஎஸ்கே அணிக்கு தற்போது வேகப் பந்துவீச்சாளர்கள், ஆல் - ரவுண்டர்கள், மாற்று வீரராக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அவசிய தேவை. அப்படி சிஎஸ்கே அணியின் விருப்ப வீரர்கள் பட்டியலில் உள்ள முக்கியமான ஆறு வீரர்களை பற்றி இங்கே பார்க்கலாம்.

பாட் கம்மின்ஸ் -

உலகக்கோப்பை வென்று கொடுத்த ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் சிறந்த வேகப் பந்துவீச்சாளர் ஆவார். அவர் பின்வரிசையில் பேட்டிங்கும் செய்யக் கூடியவர். ஆஸ்திரேலிய அணியை உலகக்கோப்பை வெற்றி, உஅலாக் டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியில் வழிநடத்திய அனுபவம் கொண்டவர் என்பதால் இவரை சிஎஸ்கே ஆல் - ரவுண்டராக கருதி ஏலத்தில் இவரை வாங்க முயற்சி செய்யும்.

ஜோஷ் ஹேசல்வுட் -

இவரும் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் தான். முன்னாள் சிஎஸ்கே வீரரும் கூட. தற்போது ஹேசல்வுட் உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். அதனால் அவரை சிஎஸ்கே அணி வாங்க முயற்சி செய்யும். இவர் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றால் சந்தேகமே இல்லாமல் இவரே அணியின் முதன்மை வேகப் பந்துவீச்சாளராக இருப்பார்.

அல்சாரி ஜோசப் -

வெஸ்ட் இண்டீஸ் வேகப் பந்துவீச்சாளரான அல்சாரி ஜோசப் சமீபத்தில் நல்ல ஃபார்மில் இருக்கிறார். பவுன்ஸ் மற்றும் வேகத்தை கூட்டுவதில் வல்லவர். இவருக்கு ஏலத்தில் நல்ல போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சிஎஸ்கே அணியும் இவரை வாங்க போட்டி போடும். இவரை அணியில் தேர்வு செய்தால் வேகப் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளங்களில் நடக்கும் போட்டியில் மட்டும் இவர் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.

ரச்சின் ரவீந்திரா -

பெங்களூரை பூர்வீகமாக கொண்ட நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா 2023 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் இடம் பெற்றார். நல்ல ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்திருந்தார். இவர் ஸ்பின்னரும் கூட. அதனால், ஆல் - ரவுண்டர் பேட்ஸ்மேன் என்பதாலும், நல்ல ஃபார்மில் இருப்பதாலும் இவரை சிஎஸ்கே அணி வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால், இவருக்கு ஏலத்தில் கடும் போட்டி இருக்கும்.

ஷாரூக் கான் -

தமிழ்நாட்டை சேர்ந்த ஆல் - ரவுண்டர் ஷாரூக் கான் ஸ்பின் பந்து வீசும் அதிரடி பேட்ஸ்மேன் ஆவார். அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி நீக்கி இருக்கும் நிலையில், அவரை சிஎஸ்கே அணி வாங்க அதிக வாய்ப்பு உள்ளது.

மனிஷ் பாண்டே -

அம்பதி ராயுடு ஓய்வு பெற்று இருப்பதால் சிஎஸ்கே அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இடம் ஒன்று காலியாக உள்ளது. அம்பதி ராயுடுவுக்கு இணையான அனுபவ வீரர் அந்த இடத்துக்கு தேவை என்பதால் உள்ளூர் போட்டிகளில் நீண்ட அனுபவம் கொண்ட மனிஷ் பாண்டேவை சிஎஸ்கே அணி ஏலத்தில் வாங்க முயற்சி செய்யும்.

Story first published: Friday, December 8, 2023, 16:58 [IST]
Other articles published on Dec 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+