Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"தோனி மோசமான விஷயத்தை செய்தார்".. சிஎஸ்கே தோல்விக்கு காரணமே அதுதான்.. சைமன் டல் சரமாரி விமர்சனம்

ஹைதராபாத் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது நடைபெற்று வரும் 2024 ஐபிஎல் தொடரில் மூன்று போட்டிகளில் ஆடி ஒரு தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி தோற்ற நிலையில் அந்தப் போட்டியில் தோனி மோசமாக ஆடியதால் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்ததாக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைமன் டல் சரமாரி குற்றச்சாட்டை முன் வைத்து இருக்கிறார்.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் சிஎஸ்கே அணி அபார வெற்றிகளை பெற்றது. அதன் பின் மூன்றாவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக ஆடியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 191 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய சிஎஸ்கே அணி 16.1 ஓவர்களில் 120 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. 23 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தோனி களமிறங்கினார்.

IPL 2024 Chennai Super Kings lost because of MS Dhoni dot balls says Simon Doull

தோனி 16 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்தார். 4 ஃபோர் மற்றும் 3 சிக்ஸ் அடித்தார். அவருடன் கடைசி வரை பேட்டிங் ஆடிய ரவீந்திர ஜடேஜா 17 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவர் மட்டுமின்றி பிற சிஎஸ்கே பேட்ஸ்மேன்களும் நிறைய பந்துகளை வீணடித்து இருந்தனர்.

தோனி தான் ஆடிய 16 பந்துகளில் ஆறு பந்துகளை டாட் பாலாக ஆடி இருந்தார். ஆனால், சைமன் டல் தோனி நிறைய டாட் பால் ஆடியதால் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்ததாக குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், ரவீந்திர ஜடேஜாவை நம்பி அவர் சிங்கிள் ரன் ஓடி அவருக்கு பேட்டிங் ஸ்ட்ரைக் கொடுக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தினார்.

இது பற்றி சைமன் டல் கூறுகையில், "தோனியின் இன்னிங்க்ஸ் மாற்றி எல்லோரும் "ஊ, ஆ" என பேசி வருகிறார்கள். ஆனால், அவர் நிறைய பந்துகளை தடுத்து ஆடினார். அவர் நிறைய டாட் பால் ஆடினார். அதன் பின் அவர் சிங்கிள் ரன்கள் ஓடுவதையும் தவிர்த்தார். நான் என்ன பார்க்கிறேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. அவர் மாபெரும் ஜாம்பவான் தோனி என எனக்கு தெரியும். ஆனால், அவர் செய்தது மோசமான விஷயம். ரன் ஓடாமல் நின்றது நிச்சயம் மோசமான விஷயம்." என்றார்.

மேலும், "நீங்கள் ஒரு போட்டியை வெல்ல முயற்சி செய்கிறீர்கள். அவர் நீண்ட காலம் கழித்து பேட்டிங் செய்கிறார் என எனக்கு தெரியும். அவர் தனது ஃபார்மை அடைய வேண்டும் என நினைத்து இருக்கலாம். ஆனால், அந்த சூழ்நிலையில் நடந்ததை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தோனி மீண்டும் வந்து விட்டார் ஆனால் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்து விட்டது" என்றார் சைமன் டல்.

Story first published: Friday, April 5, 2024, 14:43 [IST]
Other articles published on Apr 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+