Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2024 CSK : ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஓபனிங்கில் தல தோனி? சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் ட்விஸ்ட்

சென்னை : 2024 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஆட இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் துவக்க வீரர்களாக களமிறங்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பலரும் தோனியே துவக்க வீரராக ஆடப் போகிறார் எனக் கூறி வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த 2023 ஆண்டு நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே துவக்கம் அளித்தார். அவரது அதிரடி ஆட்டத்தால் பல போட்டிகளில் சிஎஸ்கே அணி பவர்பிளே ஓவர்களிலேயே பெரிய அளவில் ரன் சேர்த்து எதிரணிகளை திணற வைத்தது.

IPL 2024 Chennai Super Kings might see Dhoni as he is playing his last IPL season

ஆனால், 2024 ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் டெவான் கான்வே ஆட முடியாத நிலையில் இருக்கிறார். அவரது விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதால் அவர் ஓய்வில் இருக்கிறார். அதில் இருந்து மீண்டு வர அவருக்கு இன்னும் ஐந்து வாரங்கள் ஆகும் என கூறப்படுகிறது.

டெவான் கான்வே சிஎஸ்கே அணிக்கு திரும்பும் வரை வேறு ஒரு துவக்க வீரரை அவரது இடத்தில் களமிறக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி. எப்போதுமே சிஎஸ்கே அணியில் ஒரு வீரர் காயத்தால் விலகினால் அவருக்கு இணையான வீரரை அந்த இடத்தில் ஆட வைக்கவே தோனி முயல்வார்.

அந்த வகையில் வெளிநாட்டு வீரரான டெவான் கான்வே இடத்தில் மற்றொரு வெளிநாட்டு வீரரை துவக்க வீரராக ஆட வைக்கக் வேண்டும். அந்த வகையில் பார்த்தால் மற்றொரு நியூசிலாந்து வீரரான ரச்சின் ரவீந்திரா அந்த இடத்துக்கு பொருத்தமாக இருப்பார். அவர் தற்போது நியூசிலாந்து அணியின் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்து வருகிறார். எனினும், டேவான் கான்வே அளவுக்கு அதிரடி ஆட்டம் ஆடுவாரா? என்பது கேள்விக்குறியே.

ரச்சின் ரவீந்திரா இல்லாத பட்சத்தில் சிஎஸ்கே அணியில் துவக்க வீரராக ஆட வாய்ப்பு உள்ள வீரர்கள் வேறு யாரும் இல்லை. மற்ற வீரர்கள் அனைவருமே மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தான். அவர்களில் ஒருவரை சில போட்டிகளுக்கு மட்டும் துவக்க வீரராக ஆட வைத்து விட்டு டெவான் கான்வே வந்த உடன் அவரை துவக்க வீரராக களமிறக்கலாம்.

அந்த வகையில் பார்த்தால் தோனி சில போட்டிகளுக்கு மட்டும் துவக்க வீரராக களமிறங்க வாய்ப்பு உள்ளது. இந்திய அணியில் தோனி அறிமுகமான புதிதில் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்தே அணியில் நிரந்தர வீரராக இடம் பிடித்தார். பின்னர் கேப்டனான பின் ஆறாம் வரிசை பேட்ஸ்மேனாக மாறினார். 2024 ஐபிஎல் தொடர் தோனியின் கடைசி தொடராக இருக்கும் என கூறப்படும் நிலையில் அவர் துவக்க வீரராக களமிறங்கவும் வாய்ப்பு உள்ளது.

Story first published: Tuesday, March 19, 2024, 12:58 [IST]
Other articles published on Mar 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+