Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே ஒரு குடும்பம் மாதிரி.. தோனி தான் சிறந்த கிரிக்கெட் வீரர்.. சர்துல் தாக்கூர் பெருமிதம்

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு குடும்பம் போல் இருக்கும் என்று நட்சத்திர கிரிக்கெட் வீரர் சர்துல் தாக்கூர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட சர்துல் தாக்கூர் ரஞ்சி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாட வருகிறார்.

தமிழ்நாட்டு அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் அவர் அடித்த சதம் தான் மும்பை அணியை காப்பாற்றியது. இதேபோன்று இறுதி போட்டிகளில் மும்பை அணி தடுமாறிய போது பேட்டிங்கில் 37 பந்துகளில் அரைசதம் கடந்து அணியை காப்பாற்றினார்.

IPL 2024 - CSK All rounder Shardul thakur says He is super happy to play under MS Dhoni


இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் 2018 முதல் 2021 ஆம் ஆண்டு வரை விளையாடிய சர்துல் தாக்கூர், 2022 ஆம் ஆண்டு டெல்லி அணியும், 2023 ஆம் ஆண்டு கே கே ஆர் அணியினரும் விளையாடினார். இந்த நிலையில் தற்போது மூன்று ஆண்டுகள் கழித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சர்துல் தாக்கூர் திரும்புகிறார். அவருக்கு நான்கு கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் சிஎஸ்கே எடுத்தது.


இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சர்துல் தாக்கூர், உண்மையை சொல்ல வேண்டும் என்றால் கடந்த ஐபிஎல் தொடர் எனக்கு மோசமாக இருந்தது. தற்போது தோனிக்கு கீழ் மீண்டும் விளையாடுவதை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன். அவருடன் விளையாடினால் நிறைய விஷயங்களை நம்மால் கற்றுக் கொள்ள முடியும்.இல்லை நாம் செய்யும் தவறுகளை விட முடியும்.


அவர் ஸ்டெம்புக்கு பின் நின்று கொண்டு எங்களை வழிநடத்துவார். எங்களுக்கு முழு சுதந்திரமும் கொடுப்பார். நாங்கள் கிரிக்கெட்டில் வளர அவரை வழி வகுத்துக் கொடுப்பார். சிஎஸ்கே அணியில் மீண்டும் இணைந்து இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஏனென்றால் சிஎஸ்கே வெறும் அணி கிடையாது.அது ஒரு குடும்பம்.


குடும்ப கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் அணியாக சிஎஸ்கே இருக்கிறது. என்னுடைய பேட்டிங் மற்றும் பந்துவீச்சு மெருகேறி இருப்பதற்கு மும்பை ரஞ்சி அணியின் பயிற்சியாளர் ஒரு காரணம். அவர்கள் உடன் இணைந்து நான் கடுமையாக உழைத்தேன். முஷீர்கான் சிறப்பாக விளையாடினார். பில்டிங், பந்துவீச்சு என அனைத்துமே அவர் ஒரு பக்குவப்பட்ட வீரராக இருக்கிறார். இப்படி ஒரு வீரர் ரஞ்சிப் போட்டியில் கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஷர்துல் தாக்கூர் கூறியுள்ளார்.

Story first published: Friday, March 15, 2024, 16:46 [IST]
Other articles published on Mar 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+