சிஎஸ்கே செய்த மெகா தவறு.. ரஹானே சுத்த வேஸ்ட்.. சமீர் ரிஸ்வி எங்கே? பிளே ஆப்க்கே போக முடியாது
ஐதராபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து மெகா தவறுகளை செய்து வருவதால் இம்முறை பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்ல முடியாது என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி களம் இறங்கியது.
இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதனை அடுத்து முதலில் களம் இறங்கிய ருதுராஜ் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரச்சின் ரவிந்த்ரா மறுப்பக்கம் 9 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்த நிலையில் ருதுராஜ், ரகானே ஜோடி ஹைதராபாத் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது.

21 பந்துகளை எதிர்கொண்டு 26 ரன்கள் சேர்த்த ருதுராஜ் ஆட்டம் இழந்த நிலையில், ரஹானே 30 பந்துகளை எதிர் கொண்டு வெறும் 35 ரன்கள் தான் சேர்த்தார். இதனால் சிஎஸ்கே அணி பத்தாவது ஓவரில் இருந்து 15 வது ஓவர் வரை மிகவும் மோசமாக விளையாடியது. ஒன்பது ஓவரில் 80 ரன்கள் தொட்ட சிஎஸ்கே அணி 11.3 வது ஓவரில் தான் 100 ரன்களை தொட்டது.
13 வது ஓவர் முடிவில் 115 ரன்கள் தான் எடுத்தது. இதற்குக் காரணம் ரகானே மெதுவாக விளையாடி ரன்களை சேர்த்தது தான் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இன்றைய ஆட்டத்தில் பிளேயிங் லெவனில் இல்லாததற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுக்காமல் ரகானே போன்ற மூத்த வீரர்களை வைத்து சிஎஸ்கே அணி என்ன செய்யப் போகிறது என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ரஹானே இடத்தில் ரிஸ்வி விளையாடி இருந்தால் சிஎஸ்கே அணி இன்றைய ஆட்டத்தில் அதிக ரன்கள் அடித்திருக்கும் என்றும் குற்றச்சாட்டு உள்ள ரசிகர்கள், பேட்டிங் வரிசையில் சிஎஸ்கே அணி பல மாற்றங்களை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். மிட்செல் மார்ஷ் சரிவர விளையாடாததால் மோயின் அலியையாவது அந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். இன்றைய ஆட்டத்தில் மட்டும் சிஎஸ்கே அணி 200 ரன்களுக்கு மேல் அடித்து இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்று இருக்கலாம் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications