Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெங்களூர் அணியால் முடியாது! மீமாக மாறிய ரயில் நிலையம்.. நேரடியாக களத்தில் குதித்த சிஎஸ்கே வீரர்

பெங்களூர் : ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி சில நாட்களுக்கு முன் தொடரிலிருந்து வெளியேறியது இதற்கு ஆர் சி பி அணியின் அபார ஆட்டம் தான் காரணமாக அமைந்தது. அப்போது ஆர்.சி.பி ரசிகர்கள் சிஎஸ்கே அணி ரசிகர்களிடம் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இந்த நிலையில் ஆர்.சி.பி அணி தற்போது எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் இடம் தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறி இருக்கிறது. இதனால் தற்போது சிஎஸ்கே ரசிகர்கள் ஆர் சி பி அணிக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

IPL 2024 - CSK Bowler Tushar Deshpande shares meme about rcb trolls

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் ஸ்டார் பவுலரான துஷார் தேஷ்பாண்டே நேரடியாகவே களத்தில் குதித்து ஆர்சிபி அணியை கிண்டல் செய்து இருக்கிறார். அதாவது பெங்களூரில் கன்டோன்மென்ட் ரயில் நிலையம் என்று ஒரு இடம் இருக்கிறது. அதனை பெங்களூர் கான்ட் என்று போர்டில் எழுதி இருப்பார்கள். அதாவது கன்டோன்மென்ட் என்ற வார்த்தையை சுருக்கி அவர்கள் போட்டு இருப்பார்கள்.

ஆனால் இதையே சிஎஸ்கே ரசிகர்கள் மீம்ஸாக மாற்றி விட்டார்கள். பெங்களூர் கான்ட் என்ற அந்த போர்டை போட்டு பெங்களூர் அணியால் முடியாது என்று கிண்டல் செய்து இருக்கிறார்கள். இதனை சிஎஸ்கே அணியின் பவுலரான துஷர் தேஷ்பாண்டே, தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு கிண்டல் அடித்திருக்கிறார்.

IPL 2024 - CSK Bowler Tushar Deshpande shares meme about rcb trolls

மேலும் சி எஸ் கே ரசிகர்கள் வித்தியாசமாக எப்படி இருக்கிறார்கள் என்று பாருங்கள் என அவர் பதிவிட்டிருக்கிறார்.

மேலும் ஆர்சிபிஐ கிண்டல் செய்து பல மீம்ஸ்களையும் அவர் லைக் செய்து இருக்கிறார். இந்த நிலையில் இதற்கு ஆர் சி பி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ரசிகர்கள் நடக்கும் சண்டையில் வீரர்கள் நேரடியாக களத்தில் இறங்க கூடாது என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கு பதிலடி கொடுத்த சிஎஸ்கே ரசிகர்கள் இந்த சண்டை தொடங்கியதற்கு காரணமே விராட் கோலி களத்தில் அத்துமீறி நடந்து கொண்டது தான் என்றும் விராட் கோலி எப்படி செய்யும் போது எங்கள் அணியில் உள்ள ஒரு வீரர் செய்வதில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி கேட்டு இருக்கிறார்கள். எனினும் நன்மதிப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தேஸ்பாண்டே அந்த பதிவை நீக்கி இருக்கிறார்.

Story first published: Thursday, May 23, 2024, 7:14 [IST]
Other articles published on May 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+