For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முஷ்டஃபிகுர் ரஹ்மானை வாங்க சிஎஸ்கே முடிவு எடுத்தது ஏன்? இதுதான் காரணம்.. அடம்பிடித்த பயிற்சியாளர்!

சென்னை: வங்கதேச அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான முஷ்டாஃபிகுர் ரஹ்மானை வாங்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு எடுத்ததற்கு அந்த அணியின் பவுலிங் பயிற்சியாளர் பிராவோ காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி தரப்பில் நியூசிலாந்து அணியின் டேரல் மிட்சல் ரூ.14 கோடிக்கும், உத்தரப் பிரதேச வீரர் சமீர் ரிஸ்வியை ரூ.8.4 கோடிக்கும், ஷர்துல் தாக்கூரை ரூ.4 கோடிக்கும், வங்கதேச அணியின் முஷ்டாஃபிகுர் ரஹ்மானை ரூ.2 கோடிக்கும், நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திராவை ரூ.1.8 கோடிக்கும் வாங்கியது.

IPL 2024 : CSK bowling Coach DJ Bravo behind the reason for CSK picks Bangladesh Player Mustafizur Rahman

அதேபோல் இந்திய யு19 வீரர் அவினாஷ் ராவ் ரூ.20 லட்சத்திற்கும் சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டார். வழக்கமாக அனுபவ வீரர்கள் அதிகமாக ஏலத்தில் வாங்க முயற்சிக்கும் சிஎஸ்கே அணி, இம்முறை இளம் வீரர்களை தேடி தேடி வாங்கியுள்ளது. இதன் மூலமாக சிஎஸ்கே அணியின் அணுகுமுறையும், அணி நிர்வாகத்தின் திட்டமும் மாறி வருவதாக ரசிகர்கள் கணித்துள்ளனர்.

அதேபோல் வங்கதேச அணியின் முஷ்டாஃபிகுர் ரஹ்மானை வாங்கியது ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இடதுகை வேகப்பந்துவீச்சாளரான முஷ்டாஃபிகுர் ரஹ்மான், இம்முறை ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட ஒரே வங்கதேச வீரராவார். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய போது, தோனியுடன் மோதலில் ஈடுபட்ட வீரரை சிஎஸ்கே அணி வாங்கியது கூடுதல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அதேபோல் பதிரானாவுக்கு மாற்று வீரராக வாங்கப்பட்டாலும், சேப்பாக்கம் மைதானத்தில் முஷ்டாஃபிகுர் ரஹ்மானின் பந்துவீச்சு எதிரணிகளை அச்சுறுத்தும் என்பது நிச்சயம். ஸ்விங் மற்றும் கட்டர் பந்துகளை வீசுவதன் மூலமாக முஷ்டாஃபிகுர் ரஹ்மான், பிராவோவுக்கான மாற்று வீரராகவும் இருப்பார். ஏனென்றால் முஷ்டாஃபிகுர் ரஹ்மானின் சிறந்த ஸ்லோயர் பந்துகளும் உள்ளது.

முஷ்டாஃபிகுர் ரஹ்மானை சிஎஸ்கே அணி வாங்க வேண்டும் என்ற ஆலோசனையை சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளரான டுவைன் பிராவோ தான் எடுத்திருப்பார் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் முஷ்டாஃபிகுர் ரஹ்மான் மற்றும் பிராவோ இருவரும் வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் கொமிகா விக்டோரியன்ஸ் அணிக்காக இணைந்து விளையாடி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, December 23, 2023, 10:08 [IST]
Other articles published on Dec 23, 2023
English summary
IPL 2024 : CSK bowling Coach DJ Bravo behind the reason for CSK picks Bangladesh Player Mustafizur Rahman for the IPL 2024 as a back up of Maheesha Pathirana
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+