Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs SRH - எங்கள் அணியில் இது எல்லாம் சரியில்லை.. உண்மையை ஒப்பு கொண்ட கேப்டன் ருதுராஜ்

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது இரண்டாவது தோல்வியை தழுவி இருக்கிறது. நான்கு போட்டியில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி இரண்டில் வெற்றி இரண்டு தோல்வி என நான்கு புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் தற்போது மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

சிஎஸ்கேவின் ரன் ரேட் 0.51 என்ற லெவல் இருக்கிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்து கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அது என்னவென்று தற்போது பார்க்கலாம்.

IPL 2024 - CSK captain Ruturaj reveals where chennai lost the game vs SRH

ஹைதராபாத் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்து வந்தீர்களா என்று கிரிக்கெட் விமர்சகர் கேள்வி கேட்க, இதற்கு பதில் அளித்த ருதுராஜ் கெயிக்வாட் ஆடுகளம் மிகவும் தோய்வாக இருந்தது. கருப்பு மணலை பயன்படுத்தி ஆடுகளத்தை தயார் செய்திருக்கிறார்கள். எனவே இந்த ஆடுகளம் தோய்வாக தான் இருக்கும் என்று முன்பே நாங்கள் கணித்து விட்டோம் என்று கூறினார்.

தொடர்ந்து பேசி அவர் ஹைதராபாத் அணி கடைசி பத்து ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி ரன்கள் அடிக்கும் வேகத்தை கட்டுப்படுத்தி விட்டார்கள். நாங்கள் கடைசி ஐந்து ஓவர்களில் சரியாக விளையாடவில்லை. முதல் 10 ஓவரில் 80 ரன்களுக்கு மேல் இருந்தோம். ஆனால் அதன் பிறகு சன்ரைசர்ஸ் வீரர்கள் பிரமாதமாக பந்து வீசினார்கள். அந்தக் கட்டத்தில் நாங்கள் அதிக ரன்கள் சேர்க்க தவறிவிட்டோம்.

பந்து கொஞ்சம் பழையதாக மாறியவுடன் பேட்டிற்கு வராமல் தோய்வாக இருந்தது. இந்த சூழலை சிறப்பாக சன்ரைசர்ஸ் வீரர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். அதேசமயம் நாங்கள் பந்து வீசும் போது பவர் பிளேவில் சொதப்பிவிட்டோம். குறிப்பாக ஒரு ஓவரில் அதிக ரன்கள் சென்று விட்டது. இவ்வளவு ரன்களை கொடுத்தோம்.

நாங்கள் பிற்பகுதியில் அபாரமாக செயல்பட்டு போட்டியை கடைசி வரை கொண்டு சென்றோம். இந்த ஆடுகளத்தில் நாங்கள் ஒரு 170 -175 ரன்கள் அடித்திருக்க வேண்டும். இந்த ரன்களை அடித்து நாங்கள் பவர் பிளேவில் சரியாக பந்து வீசி இருந்தால் நிச்சயமாக வெற்றி பெற ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும். நாங்கள் ஆரம்ப கட்டத்தில் ஒரு முக்கியமான கேட்சையும் மிஸ் செய்து விட்டோம். ஆட்டத்தின் இறுதி பகுதியில் பனிப்பொழிவு இருந்தது. ஆனால் இதையெல்லாம் தாண்டி மோயின் அலி, சிறப்பாக பந்து வீசினார் என்று ருதுராஜ் பாராட்டினார்.

Story first published: Saturday, April 6, 2024, 0:03 [IST]
Other articles published on Apr 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+