பெங்களூர் : ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியை பிளே ஆப் சுற்றுக்கு செல்ல விடாமல் தடுத்த ஆர்சிபி அணி ரசிகர்கள் நேற்று அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் சமூக வலைத்தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூருவில் இந்த போட்டி முடிவடைந்த பிறகு ஆர் சி பி ரசிகர்கள் சிஎஸ்கே ரசிகர்களை கடுமையாக கிண்டல் செய்து தகாத செயலில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
மேலும் ஆர்சிபி அணி ரசிகர்கள் பெங்களூர் நகர வீதியில் உற்சாகமாக அணிவகுப்பு நடத்தினர். பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதையே பெரிய அளவில் ஆர் சி பி ரசிகர்கள் கொண்டாடினர். இதனை பார்க்கும்போது இதோ ஆர் சி பி கோப்பை தான் வென்று விட்டதோ என்று நினைக்கத் தோன்றியது.

அந்த அளவுக்கு ஆர் சி பி அணியின் ரசிகர்களின் அடாவடி இருந்தது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் ராயுடு, ஆர் சி பி ரசிகர்களை கிழித்து தொங்க விட்டு இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஆர் சி பி அணி பிளே ஆப் சுற்றுக்கு தான் சென்று இருக்கிறது. ஆனால் அவர்கள் ஏதோ கோப்பையை வென்று விட்டது போல் கொண்டாடினார்கள்.
ரசிகர்கள் பெங்களூரில் வெறும் கையில் ஊர்வலம் போனார்கள். சிஎஸ்கே விடம் ஐந்து கோப்பை இருக்கிறது. வேண்டுமானால் ஆர்சிபி ரசிகர்களுக்கு சிஎஸ்கே தங்களிடம் இருக்கும் ஒரு கோப்பையை கொடுத்து ஊர்வலம் நடத்த பயன்படுத்தி இருக்கலாம் என்று கூறினார்.மேலும் ஆர்.சி.பி அணி நேற்றைய ஆட்டத்தில் நன்றாக தான் விளையாடியதாகவும் அவர்கள் வெற்றி பெற நான் வாழ்த்துகின்றேன்.
ஆனால் சன்ரைசர்ஸ் அணி தான் இம்முறை சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று அம்பத்தி ராயுடு கூறியிருக்கிறார். இதற்கு பதில் அளித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வருண் ஆரோன், ஆர்சிபி அணி சிஎஸ்கே வின் ஆறாவது கோப்பையை ஏற்கனவே பறித்து விட்டதாக கூறினார். ராயுடுவின் இந்த பதிலை சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் ராயுவின் இந்த கருத்துக்கு ஆர் சி பி ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள்.