Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு வழியாக கிடைத்த தோனியின் தரிசனம்.. கடைசியில் வெறித்தனம்.. சிஎஸ்கேக்கு முதல் தோல்வி! டெல்லி அபாரம்

விசாகப்பட்டினம் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 2024 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய முதல் தோல்வியை தழுவி இருக்கிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 13 வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் பல பரிட்சை நடத்தியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க வீரர் பிரித்விஷா 43 ரன்களும், டேவிட் வார்னர் 35 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து டெல்லி அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். பதிரானா வீசிய ஒரே ஓவரில் மிட்செல் மார்,ஸ் ஸ்டெப்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த போதிலும் கேப்டன் பிரித்வி ஷா தன்னுடைய பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தார்.

IPL 2024 - CSK Lost against Delgi capitals despite MS Dhoni Late Heroics

பண்ட் 32 பந்துகளில் அவர் 50 ரன்கள் சேர்த்தார். இதில் மூன்று சிக்சர்களும், நான்கு பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே தரப்பில் பதினானா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதை அடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே அணி களம் இறங்கியது .

எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ருதுராஜ் ஒரு ரன்னிலும், ரச்சின் ரவிந்திரா இரண்டு ரன்களிலும் ஆட்டம் இழக்க சிஎஸ்கே அணி 7 ரன்களில் இரண்டு விக்கெட் இழந்தது. இதன் அடுத்து அனுபவ வீரர் ரகானே மற்றும் டேரல் மிட்செல் ஆகியோர் அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர். ரஹானே 30 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்தார். இதில் 5 பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். இதேபோன்று டேரல் மிட்செல் அதிரடியாக ஆடி 26 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார்.

இதில் ஒரு பவுண்டர்,2 சிக்சர்களும் அடங்கும். இந்த ஜோடி சிஎஸ்கேவை காப்பாற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முக்கிய கட்டத்தில் இருவரும் ஆட்டம் இழந்தனர். இந்த தருணத்தில் ஆடுகளம் தோய்வாக மாறியதால் சிஎஸ்கே வீரர்கள் அடித்த பந்து பவுண்டரிகளுக்கு செல்லவில்லை. இதனால் சிவம் துபே 18 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதிரடி வீரர் சமீர் ரிஸ்வி முதல் பந்தில் கோல்டன் டக் ஆனார். இதை அடுத்து தோனி களத்திற்கு வந்தபோது கடைசி நான்கு ஓவர்களில் வெற்றிக்கு 72 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை இருந்தது. அப்போது தோனி தன்னுடைய பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரி சிக்ஸர்கள் என விரட்டினார்.

இதனால் கடைசி மூன்று ஓவரில் 58 ரன்கள் என்ற தேவைப்பட்டது. இதனால் சிஎஸ்கே அணி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் நம்பிக்கையாக இருந்தனர். இந்த கட்டத்தில் பதினெட்டாவது ஓவர் வீசிய கலீல் அகமத் தொடர்ந்து ஓயிடு பந்துகளாக வீசி தோனி சிக்ஸர் அடிக்கும் வாய்ப்பை குறைத்தார். தொடர்ந்து ஓயிடாக வீச முற்பட்டபோது தோனி ஐந்தாவது பந்தில் மட்டும் சிக்ஸர் அடித்து விளாசினார். இதன் மூலம் கடைசி இரண்டு ஓவர்களில் 46 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. அப்போது 19 வது ஓவர் வீசிய முகேஷ் குமார் அபாரமாக செயல்பட்டு அந்த ஓவரில் வெறும் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

இதனால் சிஎஸ்கே அணியின் வெற்றி வாய்ப்பு முற்றிலும் போனது. எனினும் கடைசி ஆறு பந்தில் 41 ரன்கள் தேவைப்பட்டபோது களத்தில் நின்ற தோனி இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்ஸர் என பறக்க விட்டு கடைசி ஓவரில் மட்டும் 20 ரன்களை சேர்த்தார். இதன் மூலம் 16 பந்துகளில் தோனி 37 ரன்கள் அடித்தார். இதில் நான்கு பவுண்டர்களும் மூன்று சிக்ஸர்களும் அடங்கும்.எனினும் சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Story first published: Sunday, March 31, 2024, 23:41 [IST]
Other articles published on Mar 31, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+