Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2024 CSK : வெளியான தோனி வீடியோ.. கவலையில் ரசிகர்கள்.. பேட்டிங்கில் இப்படி ஒரு சிக்கல் இருக்கா?

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் தோனி பேட்டிங் ஆடும் விதத்தை பார்த்து அவரது தீவிர ரசிகர்கள் தங்கள் கவலையை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

கடந்த 2023 ஐபிஎல் தொடரில் தோனியால் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடியவில்லை. அவருக்கு கால் மூட்டில் வலி இருப்பது பின்னர் வெளி உலகுக்கு தெரிய வந்தது. அந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்த உடன் தோனி அதற்காக அறுவை சிகிச்சை ஒன்றை செய்து கொண்டார். அதன் பின் அவரால் பேட்டிங் ஆட முடியுமா? 2024 ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்பாரா? என்ற கவலை இருந்தது.

IPL 2024 CSK released Dhoni practice video but fans are not happy

இந்த நிலையில், 2024 ஐபிஎல் தொடரில் தான் ஆடப் போவதை உறுதி செய்துள்ள தோனி, சிஎஸ்கே அணியின் சேப்பாக்கம் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பேட்டிங் பயிற்சி செய்து வருகிறார். அது குறித்து சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் த்ரோடவுன் மூலம் வீசப்பட்ட பந்துகளை அடித்து பயிற்சி செய்தார்.

ஆனால், ஒரு முறை கூட அவர் சிக்ஸ் அடிக்க முயற்சி செய்யவில்லை. அதே சமயம், பந்தை தடுப்பதிலும், தரையோடு தரையாக அடிப்பதிலும் சிறப்பாகவே செயல்பட்டு இருந்தார் தோனி. ஆனாலும், தோனி சிக்ஸ் அடிக்கவில்லையே என அவரது ரசிகர்கள் கவலையில் உள்ளனர். கடந்த ஐபிஎல் சீசன்களில் எல்லாம் தோனி பயிற்சியில் சிக்ஸ் அடித்தார் என்பதே சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரிய தலைப்பு செய்தியாக இருந்து வந்தது. அது போன்ற ஒரு செய்தி இப்போதும் வராதா என அவர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

IPL 2024 CSK released Dhoni practice video but fans are not happy

விமர்சகர்களை பொறுத்தவரை தோனி சிக்ஸ் அடிப்பதை விட அவரால் பேட்டிங் செய்ய முடிகிறதா என பார்ப்பதே இப்போது முக்கியம் என கூறுகின்றனர். அவர் அறுவை சிகிச்சை செய்துள்ளார் என்பதோடு, அவரது வயது 41 ஆகிறது. அவர் பேட்டிங்கில் பின் வரிசையில் தான் இறங்கி வருகிறார். எனவே, அவரது பேட்டிங் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதை விட, அவரால் எந்த அசௌகரியமும் இன்றி விக்கெட் கீப்பிங் செய்ய முடிகிறதா? என பார்ப்பதே முக்கியம் என்கின்றனர்.

Story first published: Monday, March 11, 2024, 12:24 [IST]
Other articles published on Mar 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+