For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே பிடிவாத குணத்தால் தோற்க போகுது.. உலகமே சொன்னாலும் கேட்க மாட்டாங்க! முன்னாள் வீரர் கண்டனம்

சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. குஜராத் அணிக்கு எதிராக தோல்வி அடைந்த நிலையில் சிஎஸ்கே வின் ரன் ரேட் சரிந்துள்ளது.

இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்று வாய்ப்பு பிரகாசமாகும் இல்லை என்றால் தொடரை விட்டு வெளியேறும் நிலைக்கு கூட தள்ளப்படலாம். இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக சிஎஸ்கே விளையாட இருக்கிறது.

IPL 2024 - CSK Team is very stubborn says akash chopra

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, இன்றைய ஆட்டத்தின் முடிவு மூலம் ஒரு அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் இன்னொரு அணி தோற்றால் தொடரை விட்டு வெளியேறிவிடலாம். ரசிகர்கள் அந்த அணிக்கு டாட்டா பாய்!பாய்! என்று கூறிக் கொள்ளலாம். சென்னை அணிக்கு இந்த தொடர் பின்னடைவாக தான் அமைந்திருக்கிறது.

சரியான விஷயங்களை விட தவறான விஷயங்கள் தான் சென்னை அணிக்கு நிறைய இந்தத் தொடர் மூலம் நடந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் சிஎஸ்கே அணி பிடிவாத குணத்துடன் இருக்கிறது. சிஎஸ்கே அணி ஒரு வீரர் மீது நம்பிக்கை வைத்திருந்தால் அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கும் அவர்கள் சரியாக விளையாடவில்லை என்றாலும் உலகமே அந்த வீரரை அணியை விட்டு நீக்கி விடுங்கள் என்று கூறினாலும் அவர்கள் முடியவே முடியாது என்று கூறுவார்கள்.

இது சிஎஸ்கே அணியில் வெற்றியின் ரகசியமாகவும் சில சமயம் பின்னடைவுக்கு காரணமாகவும் அமைந்திருக்கிறது. சில சமயம் ஃபார்மில் இல்லாத வீரர் திடீரென்று கடைசி கட்டத்தில் அதிரடியாக வெற்றி தேடி கொடுக்கலாம். ஆனால் தற்போது சில வீரருக்கு தலைக்கு மேல் தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. ரஹானேவை இன்னும் சிஎஸ்கே வைத்து விளையாடுமா என்பதை பார்க்க எனக்கு ஆர்வமாக இருக்கிறது.

குஜராத்துக்கு எதிரான கடைசி போட்டியிலும் அவரை விளையாட வைத்தீர்கள். தொடக்க வீரராக களம் இறக்கிறீர்கள். இந்த நாள் உங்களுடைய கேப்டன் மூன்றாவது வீரராக களமிறங்கி டக் அவுட் ஆனார். ரச்சின் ரவீந்திரா தொடக்க வீரராக களம் இறக்குகிறீர்கள். ரவீந்திரா விளையாடினால் மகீஷ் தக்சனா உங்களுக்கு கிடைக்க மாட்டார்.

ஏற்கனவே உங்களுடைய பந்து வீச்சு பலவீனமாக இருக்கிறது. தற்போது சிஎஸ்கே இது போல் தவறு செய்வது ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால் இது போன்ற தவறுகளை அவர்கள் எப்போதாவது தான் செய்வார்கள். அவருடைய யுத்திகள் எனக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது. தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் சரியாக விளையாடுவது போல் தெரியவில்லை. கடந்த போட்டியில் அவர் டக் அவுட் ஆனார். பின் சிஎஸ்கே வின் பேட்டிங் மிகவும் பலவீனமாக தெரிந்தது.

ஒரு வீரர் முதலில் அதிரடியாக விளையாடினால், தொடர் முடிவில் சராசரியாக விளையாடுவார்கள். இதுதான் இயற்கை நீதி. நடப்பு தொடரில் அவர் மூன்று நான்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விட்டார். தற்போது தான் அவர் முக்கிய கட்டத்தில் ரன்கள் சேர்க்க வேண்டும். அப்படி அது செய்தால் சிஎஸ்கே அணிக்கு அது நல்லது. சிவம் துபே, ராஜஸ்தான் அணிக்காக விளையாடி இருக்கிறார். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர் தன்னுடைய முன்னாள் அணிக்கு எதிராக நன்றாக விளையாடுவார் என்று நம்பலாம் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

Story first published: Sunday, May 12, 2024, 14:08 [IST]
Other articles published on May 12, 2024
English summary
IPL 2024 - CSK Team is very stubborn says akash chopra சிஎஸ்கே பிடிவாத குணத்தால் தோற்க போகுது.. உலகமே சொன்னாலும் கேட்க மாட்டாங்க! முன்னாள் வீரர் கண்டனம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+