விசாகப்பட்டினம் : டெல்லி - சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான போட்டியின் இடையே நிகழ்ந்த சுவாரஸ்யத்தை வைத்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோனி ஆடிய ஆட்டம் சிஎஸ்கே ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடைசி நேரத்தில் களமிறங்கிய தோனி, 16 பந்துகளில் 3 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 37 ரன்களை விளாசி அசத்தினார். அதிலும் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே விண்டேஜ் தோனியை நினைவூட்டியுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ் பாடும் "எனக்கு ராஜாவா நான்" என்று வரியை எடுத்து, தோனி, "எனக்கு ராஜாவா நான்" என்று பாடுவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.

பேட்ட படத்தில் ரஜினிகாந்த் கேட்டை திறக்கும் போது, "இனிமே தான் பாக்க போற.. இந்த காளியோட ஆட்டத்தை" என்று கூறுவார். அது அபூர்வ ராகங்கள் ரஜினியின் முதல் காட்சியை ஒத்திருக்கும். அதேபோல் நேற்று விசாகப்பட்டினத்தில் தோனி அடித்த எக்ஸ்ட்ரா கவர் சிக்ஸ், 2005ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இதே விசாகப்பட்டினம் மைதானத்தில் முதல் சதத்தை அடித்த போதும், தோனி இப்படியொரு ஷாட்டை ஆடியிருப்பார். ரஜினி கேட்டை திறக்கும் ஸ்டைல் எப்படி வருடங்கள் கடந்தும் மாறவில்லையோ அதுபோல, தோனிக்கும் விசாகபட்டினத்திற்குமான பிணைப்பும் மாறவில்லை.

அறை எண்.305ல் கடவுள் படத்தில் காதல் சுகுமார், "எப்படிண்ணே.. எப்படிண்ணே.. அவ்வளவு பெரிய கடை வச்சுட்டு இந்த ரூம்லலாம் இருக்கீங்க" என்பார். அதேபோல் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு நட்சத்திர வீரர் ஜடேஜாவின் பேட்டிங் முக்கிய காரணமாகும். 17 பந்துகளை எதிர்கொண்டு 21 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். இதனால் ஜடேஜாவை கிண்டல் செய்யும் வகையில், "எப்படிண்ணே.. போன வருஷம் அந்த 2 பால் மட்டும் உன் பேட்டில் மாட்டுச்சு" என்று 2023 ஐபிஎல் இறுதிப்போட்டியில் கடைசி 2 பந்தில் அடித்த சிக்ஸ், பவுண்டரியை கிண்டல் செய்து உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

தவசி படத்தில் எம்ஜிஆர் சண்டை காட்சியை டிவி-யில் பார்க்கும் வடிவேலு, உணர்ச்சி பொங்க அருகில் இருப்பவரை தொந்தரவு செய்வார். இதனால் பக்கத்தில் அமர்ந்திருப்பவர் கோபமடைந்து அருவாளை காட்டுவார். இதனை மாற்றி வடிவேலு-வாக ரிஷப் பண்டையும், அருகில் இருப்பவரை ரிக்கி பாண்டிங்காகவும் மாற்றி, தோனியின் ஆட்டத்தை பார்த்து ரிஷப் பண்ட் உற்சாகமடைவது போலவும், இதனால் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் டென்ஷனாவது போலவும் உருவாக்கப்பட்டுள்ள மீம் உச்சக்கட்ட காமெடி ரகம்.

நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இருப்பினும் தோனியின் அதிரடி ஆட்டத்தால் சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக ஆட்டத்தில் தோல்வியடைந்ததை பற்றி சிஎஸ்கே ரசிகர்கள் கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. இதனை சுறா படத்தில் தமன்னா தற்கொலைக்கு முயற்சிக்க வரும் போது, வடிவேலு அதிர்ச்சியுடன் பார்ப்பார். அப்போது விஜய், வடிவேலு-விடம், ”பெண்ணை பார்க்காமல் வலையை பாருடா” என்பார். அதனை மாற்றி, ஆட்டத்தில் தோற்றுவிட்டோம்.. அதனை பாருடா.. என்று விஜய் சொல்வதாகவும், அதற்கு ரசிகர்கள், "மேட்சை விடுப்பா.. தல தோனியோட சிக்ஸை பாருப்பா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா.