Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs DC : மொயின் அலி அல்லது மிட்சல்? சிஎஸ்கே பிளேயிங் XIல் மாற்றம்? ருதுராஜ் முடிவு என்ன?

விசாகப்பட்டினம் : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் மற்றும் இம்பேக்ட் பிளேயராக யார் களமிறங்க வாய்ப்பு உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

ஐபிஎல் தொடரின் 13வது லீக் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து சென்னை அணி இன்று களமிறங்கவுள்ளது. இந்த சீசனில் டெல்லி அணிக்கு விசாகப்பட்டினம் மைதானம் தான் சொந்த மைதானம் என்பதால், இந்த ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நடக்கவுள்ளது. இதுவரை சிஎஸ்கே அணி விளையாடிய 2 போட்டிகளில் இரண்டிலும் வென்று அசத்தியுள்ளது.

IPL 2024 CSK vs DC Moeen Ali or Daryl Mitchell Who will make into the playing xi of the CSK for the game against Delhi

அதேபோல் டெல்லி அணி விளையாடிய 2 போட்டிகளிலும் இரண்டிலும் தோல்வியடைந்து பரிதாபமான நிலையில் உள்ளது. இதனால் சொந்த மைதானத்தில் விளையாடும் முதல் போட்டியில் வென்று, புள்ளிக் கணக்கை தொடங்க டெல்லி அணி தீவிரமாக உள்ளது. இதுவரை சிஎஸ்கே மற்றும் டெல்லி அணி நேருக்கு நேர் மோதிய ஆட்டங்களில் சிஎஸ்கே அணி 19 முறையும், டெல்லி அணி 10 முறையும் வென்றுள்ளன.

விசாகப்பட்டினம் பிட்சை பொறுத்தவரை ஸ்பின்னர்களை விடவும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவியாக இருக்கும். இதுவரை விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற 8 ஐபிஎல் போட்டிகளில் 61 விக்கெட்டுகள் வேகப்பந்துவீச்சாளர்களுக்கும், 36 விக்கெட்டுகள் ஸ்பின்னர்களுக்கும் கிடைத்துள்ளது. இதனால் சிஎஸ்கே அணி எத்தனை ஸ்பின்னர்களுடன் களமிறங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணியின் ரச்சின் ரவீந்திரா, சிவம் துபே, ஜடேஜா என்று 3 முக்கிய இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், ஆஃப் ஸ்பின்னருடன் டெல்லி அணி களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் டெல்லி அணியில் டேவிட் வார்னர், ரிஷப் பண்ட் மற்றும் அக்சர் படேல் என்று 3 முக்கிய இடதுகை பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர்.

இதனால் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் மொயின் அலி இடம்பெற வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் மற்றும் இம்பேக்ட் பிளேயர் பொறுத்தவரை ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, ரஹானே, டேரல் மிட்சல் அல்லது மொயின் அலி, சிவம் துபே, ஜடேஜா, சமீர் ரிஸ்வி, தோனி, தீபக் சஹர், துஷார் தேஷ்பாண்டே, முஷ்டாஃபிசுர் ரஹ்மான் ஆகியோரும், இம்பேக்ட் பிளேயராக பதிரனாவும் களமிறங்க வாய்ப்புகள் உள்ளது.

Story first published: Sunday, March 31, 2024, 7:28 [IST]
Other articles published on Mar 31, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+