For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

”2” பவர் பிளேவிலும் சொதப்பல்.. அந்த வீரரின் பேட்டிங்கும் முக்கிய காரணம்.. தோல்வி குறித்து ருதுராஜ்!

விசாகப்பட்டினம் : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பவர் பிளே ஓவர்களில் ரன்கள் சேர்க்க முடியாமல் திணறியதே தோல்விக்கு காரணம் என்று சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய வார்னர் 52 ரன்களும், ரிஷப் பண்ட் 51 ரன்களும் சேர்த்தனர். இதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

IPL 2024 CSK vs DC We didn t score enough in the Powerplay overs says CSK Ruturaj Gaikwad after the loss against DC

இருப்பினும் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடைசி நேரத்தில் களமிறங்கி 16 பந்துகளில் 3 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 37 ரன்கள் சேர்த்தது சென்னை அணி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீசனில் சிஎஸ்கே அணி முதல்முறையாக தோல்வியை சந்தித்துள்ளது. கேப்டன் பொறுப்பை ஏற்ற பின் ருதுராஜ் கெய்க்வாட்-ம் முதல்முறையாக தோல்வியை சந்தித்துள்ளார்.

இந்த தோல்வி குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், முதல் 6 ஓவர்களுக்கு பின் சிஎஸ்கே அணியின் பவுலர்கள் நல்ல கம்பேக்கை கொடுத்தார்கள். அவர்களை 190 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். இந்த பிட்சில் முதல் இன்னிங்ஸின் போது பேட்டிங்கிற்கு கொஞ்சம் சாதகமாக இருந்தது. ஆனால் 2வது இன்னிங்ஸின் போது பிட்சில் கொஞ்சம் ஸ்விங் இருந்தது.

ரச்சின் ரவீந்திரா கொஞ்சம் கூடுதலாக பந்துகளை மிஸ் செய்தார். அதற்கு பிட்சில் கூடுதல் மற்றும் ஸ்விங் இருந்ததே காரணம். அதுதான் தோல்விக்கும் முக்கிய காரணமாக அமைந்தது. இருப்பினும் முதல் பாதிக்கு பின் இலக்கை எட்டிவிடலாம் என்று நினைத்தோம். ஆனால் பவர் பிளே ஓவர்களில் சொதப்பியது பின்னடைவாக இருந்தது. நாங்கள் ரன் ரேட்டை பிடிக்க வேண்டிய தேவையில் இருந்து கொண்டே விளையாடினோம்.

டெல்லி பேட்டிங்கின் போது முதல் 4 ஓவர்களை நன்றாக வீசினோம். பவர் பிளேவின் கடைசி 2 ஓவர்கள் கொஞ்சம் கூடுதலாக ரன்கள் சென்றது. 2 வெற்றிகளுக்கு பின் ஒரு தோல்வி வருவது சகஜம் தான். அதனால் கவலைப்பட தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். கேப்டனான பின் ருதுராஜ் கெய்க்வாட்-ன் பேட்டிங் ஃபார்ம் மோசமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, April 1, 2024, 0:12 [IST]
Other articles published on Apr 1, 2024
English summary
IPL 2024 CSK vs DC : We didn't score enough in the Powerplay overs says CSK Ruturaj Gaikwad after the loss against DC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+