For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL CSK vs GT : டாஸில் தோற்ற ருதுராஜ்.. மலிங்காவை இறக்குவதாக சவால்.. குஜராத் அணிக்கு கச்சேரி

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான 2024 ஐபிஎல் தொடரின் லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸில் தோல்வி அடைந்த சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் எங்கள் அணியின் மலிங்காவை நாங்கள் ஆட வைக்கப் போகிறோம் என்றார்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அப்போது பேசிய சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், நாங்களும் முதலில் பந்துவீசவே நினைத்தோம். முதல் போட்டியில் முதலில் பந்துவீச்சில் தடுமாறிய போதும் பின் சிறப்பாக செயல்பட்டோம். அணியில் அனைவரும் வெற்றிக்காக ஆடினார்கள். இந்தப் போட்டியில் நாங்கள் எங்கள் அணியின் மலிங்கா மதீஷா பதிரானாவை களமிறக்குகிறோம் என அறிவித்தார்.

IPL 2024 CSK vs GT Chennai Super Kings lost the toss Matheesha Pathirana comes in

இலங்கை வேகப் பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா சிஎஸ்கே அணியின் முதல் போட்டியில் பங்கேற்கவில்லை. அவர் காயம் காரணமாக ஓய்வில் இருந்தார். இந்த நிலையில் இரண்டாவது போட்டிக்கு அவர் திரும்பி இருக்கிறார். அதே சமயம், மற்றொரு இலங்கை வேகப் பந்துவீச்சாளர் தீக்ஷனா அணியில் இருந்து நீக்கப்பட்டார். முதல் போட்டியில் பதிரானாவுக்கு பதில் அணியில் இடம் பெற்ற வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் முஸ்தாபிசூர் ரஹ்மான் சிறப்பாக பந்து வீசியதால் அவர் அணியில் தொடர்கிறார்.

பதிரானா மற்றும் முஸ்தாபிசூர் ரஹ்மான் என இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களும் சென்னை மைதானத்தில் சிறப்பாக பந்து வீசுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது. அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

சிஎஸ்கே பிளேயிங் லெவன் : ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் ரஹ்மான்

சிஎஸ்கே இம்பாக்ட் வீரர்கள் : மதீஷா பதிரானா, ஷர்துல் தாக்கூர், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, மிட்செல் சான்ட்னர்

குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன் : விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில் (கேப்டன்), அஸ்மத்துல்லா ஒமர்சாய், டேவிட் மில்லர், விஜய் சங்கர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், உமேஷ் யாதவ், மோகித் சர்மா, ஸ்பென்சர் ஜான்சன்

குஜராத் இம்பாக்ட் வீரர்கள் : சாய் சுதர்சன், ஷரத் பிஆர், அபினவ் மனோகர், நூர் அகமது, மானவ் சுதர்

Story first published: Tuesday, March 26, 2024, 19:34 [IST]
Other articles published on Mar 26, 2024
English summary
IPL 2024 CSK vs GT : Chennai Super Kings lost the toss, Matheesha Pathirana comes in
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+