Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs GT : எப்புட்றா.. ஒரு வழியாக டாஸ் வென்ற ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் நடந்த முக்கிய மாற்றம்!

அகமதாபாத் : குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் வென்றுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 59வது லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி களமிறங்கியுள்ளது. அகமதாபாத் மைதானத்தில் சேஸிங் செய்யும் அணிக்கே சாதகம் என்பதால், சிஎஸ்கே அணி டாஸ் வெல்ல வேண்டும் ரசிகர்கள் விரும்பினர். ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் இந்த சீசனில் விளையாடியுள்ள 11 போட்டிகளில் 10 முறை டாஸில் தோல்வியடைந்துள்ளார்.

IPL 2024 CSK vs GT CSK Captain Ruturaj Gaikwad won the toss for the 2nd time and chose to bowl against Gujarat

இந்த நிலையில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதனால் 2வது முறையாக டாஸில் ருதுராஜ் வென்றுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் கிளீசன் நீக்கப்பட்ட அவருக்கு பதிலாக ரச்சின் ரவீந்திரா கொண்டு வரப்பட்டுள்ளார்.

இதன்பின் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், நாங்கள் பவுலிங்கை தேர்வு செய்கிறோம். இந்த பிட்ச் எப்போதும் சேஸிங்கிற்கு சாதகமாக இருக்கும். அதனால் சேஸிங் செய்யவே விரும்புகிறோம். கிட்டத்தட்ட சென்னை சேப்பாக்கம் மைதானத்தை போலவே இருக்கும். எப்போதும் ரெட் சாயில் பிட்சை விரும்பியதில்லை. பிளே ஆஃப் சுற்று நெருங்குவதால் எந்த பரபரப்பும் இல்லை.

ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் நிச்சயம் தோற்க வேண்டிய நிலை வரும். ஆனாலும் அனைத்து வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து, சிறப்பான சூழலில் வீரர்களை வைத்திருக்க வேண்டும். அதேபோல் எங்கள் அணியில் ஏராளமான வீரர்கள் காயமடைந்தனர். இந்த போட்டியில் கிளீசனுக்கு பதிலாக ரச்சின் ரவீந்திரா கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து சுப்மன் கில் பேசுகையில், நாங்களும் பவுலிங் செய்யவே ஆசைப்பட்டோம். நாங்கள் இன்னும் தகுதிபெற ஒரு சதவிகித வாய்ப்பு இருக்கிறது. அதனால் ஒவ்வொரு போட்டியிலும் கடுமையாக முயற்சிப்போம். மற்றொரு போட்டியை போலவே இதனை அணுகுவோம். நிச்சயம் இந்த பிட்சில் நன்றாக பேட்டிங் செய்ய முடியும். சாஹா மற்றும் லிட்டில் இருவரும் நீக்கப்பட்டு மேத்யூ வேட் மற்றும் கார்த்திக் தியாகி சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Story first published: Friday, May 10, 2024, 19:18 [IST]
Other articles published on May 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+