For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. குஜராத்தை பொளந்த சிஎஸ்கே.. மும்பை, ஆர்சிபியை வெளுக்கும் மீம்ஸ்!

சென்னை : சிஎஸ்கே - குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்யங்களை வைத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. தற்போது அதே குஜராத் அணியை 63 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வீழ்த்தியுள்ளது. இதனை யாரடி நீ மோகினி படத்தில் தனுஷ் தனது அப்பாவான ரகுவரனிடம், என்ன டீச்சர்.. நீங்களும் தான் இத்தனை வருஷமா வேலை செய்றீங்க.. எப்போதாவது வெளிநாடு போய்ருக்கீங்களா? என்று நக்கல் செய்வார். அதனை அப்படியே மாற்றி மும்பை அணியை பார்த்து சிஎஸ்கே அணி, நீங்களும் தான் குஜராத் கூட ஆடுனீங்க.. இப்படி வெற்றிபெற முடிஞ்சதா என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் என் கூட சண்டைக்கு வாங்கடா மொமண்ட்.

IPL 2024 CSK vs GT Fantastic Memes from Social Media after CSK won by 63 runs against Gujrata Titans at Chepauk

நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் ரன் வள்ளலான துஷார் தேஷ்பாண்டே 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனை சரத் குமாரிடம் கடிதம் படிக்கும் வடிவேலு, பச்சைக்குளிக்கு புல்லட்டும் வாங்கி கொடுக்கவும் என்று இஷ்டத்துக்கு அடித்துவிடுவார். அதனை அப்படியே மாற்றி, ருதுராஜ் கெய்க்வாட்-டிடம் துஷார் தேஷ்பாண்டே, இன்று ஜெய்க்க முக்கிய காரணமாக இருந்த துஷாருக்கு.. எல்லா போட்டிகளிலும் கண்டிப்பாக வாய்ப்பு அளிக்கவும் என்று கடிதம் படிப்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் உச்சக்கட்ட காமெடி.

IPL 2024 CSK vs GT Fantastic Memes from Social Media after CSK won by 63 runs against Gujrata Titans at Chepauk

குஜராத் அணியின் அபாயகரமான ஸ்பின்னரான ரஷீத் கானை, முதல் பந்திலேயே சிக்சர் அடித்ததோடு, மீண்டும் இறங்கி வந்து 2வது சிக்சரையும் விளாசுவார் சமீர் ரிஸ்வி. இந்த ஷாட்டிற்கு பின் தோனி சிரித்து கொண்டே ரிஸ்வியின் ஷாட்டை ரசிக்கும் காட்சி கேமராவில் காட்டப்பட்டது. இதனை சார்பட்டா பரம்பரை படத்தில் மிகப்பெரிய பாக்ஸராக காட்டப்படும் ராமனை, சாதாரணமாக கபிலன் வீழ்த்துவார். அதனை தடுக்க வரும் வாத்தியார் ரங்கம் ரசித்து பார்ப்பார். அந்த காட்சியில் எப்படி ரங்கன் வாத்தியார் ரசிப்பாரோ, அதேபோல் ரஷீத் கானை பொளந்து கட்டிய சமீர் ரிஸ்வியின் ஆட்டத்தை தோனி ரசிப்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் கூல்பம்ப்.

IPL 2024 CSK vs GT Fantastic Memes from Social Media after CSK won by 63 runs against Gujrata Titans at Chepauk

குஜராத் அணியை வீழ்த்தியதன் மூலமாக சிஎஸ்கே அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதனை ரெண்டு மேட்ச் ஜெய்ச்சிட்டு இவனுங்க போட்ற சீன் இருக்கே என்று மும்பை மற்றும் ஆர்சிபி ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இதனை நகரம் படத்தில் ஆன்டன்னா சரி செய்ய முயலும் வடிவேலு, "ஆண்டி.. இப்போ டிவி தெரியுதா ஆண்டி" என்று கேட்பார். அப்படியே அவருக்கு சிஎஸ்கே ஜெர்சியை அணிவித்து மும்பை மற்றும் ஆர்சிபி ரசிகர்களை பார்த்து வடிவேலு பாணியில், "எதுவா இருந்தாலும் மேல வந்து பேசுங்க ஆண்டி.. டேபிள் டாப்ல இருக்கதால ஒன்னுமே கேக்கலை" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

IPL 2024 CSK vs GT Fantastic Memes from Social Media after CSK won by 63 runs against Gujrata Titans at Chepauk

ஐபிஎல் தொடரின் ரஷீத் கானால் அதிக தொல்லைகளை சந்தித்தவர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி. அவரை எதிர்கொள்ள ராயுடுவை வைத்தே சமாளித்து வந்தார். இந்த சூழலில் நேற்றைய ஆட்டத்தில் அறிமுக போட்டியின் முதல் பந்திலேயே ரஷீத் கானின் வீசிய ஒரே ஓவரில் 2 சிக்சர்களை விளாசி பொளந்து கட்டினார் சமீர் ரிஸ்வி. அதனை தோனி உற்சாகமாக கண்டு ரசிப்பதை கேமரா மேன் டிவியில் காட்டினார். இதனை பரிதாபங்கள் வீடியோவில் மெட்ரோவில் ஒருத்தனை மாட்டிவிட்டு அடிவாங்க, அதனை நீண்ட முடியுடன் சுதாகர் ரசிப்பார். அதேபோல் தோனியும் ஜாலியாக ரசிப்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

IPL 2024 CSK vs GT Fantastic Memes from Social Media after CSK won by 63 runs against Gujrata Titans at Chepauk
Story first published: Wednesday, March 27, 2024, 8:11 [IST]
Other articles published on Mar 27, 2024
English summary
IPL 2024 CSK vs GT : Fantastic Memes from Social Media after CSK won by 63 runs against Gujrata Titans at Chepauk
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+