For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடும் நெருக்கடியில் குஜராத்.. பிளே ஆப் வாய்ப்பை பெற சிஎஸ்கே போராட்டம்.. அணியில் மாற்றம் நடக்குமா?

மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நரேந்திர மோடி மைதானத்தில் பலப்பரிட்சை நடத்துகின்றன. கடந்த சீசனில் இதே மைதானத்தில் இவ்விரு அணிகளும் சாம்பியன் பட்டத்துக்காக பலப் பரிட்சை நடத்தினர்.

இதில் சிவம் துபே, ஜடேஜா ஆகியோர் சிஎஸ்கே அணிக்கு வெற்றியை தேடி தந்தார்கள். ஆனால் இம்முறை இரு அணிகளும் வித்தியாசமான கள சூழலில் சந்திக்கிறார்கள். நாளைய போட்டியில் வெற்றி பெற்று ஆகவேண்டும் என்ற நெருக்கடியில் குஜராத் களமிறங்குகிறது.

IPL 2024- CSK vs GT Match today preview and analysis in tamil


நாளைய ஆட்டத்தில் குஜராத் அணி தோற்று விட்டால், ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறிவிட வேண்டும். அதே சமயம் சிஎஸ்கே அணி நாளைய போட்டியில் வென்றால் பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாகிவிடும். ஒருவேளை சிஎஸ்கே அணி தோற்றுவிட்டால் எஞ்சியிருக்கும் 2 போட்டிகளில் கண்டிப்பாக வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும்.

இப்படி இக்கட்டான நிலையில் சிஎஸ்கே அணி சிக்கி இருக்கிறது. சிஎஸ்கே அணி, பஞ்சாப் அணிக்கு எதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும் தொடக்க வீரர் ரகானே தொடர்ந்து பார்மில் இல்லாமல் தவித்து வருகிறார். எனினும் ரகானேவுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்போம் என்று அந்த அணியின் பயிற்சியாளர் கூறியிருக்கிறார்.

அதே சமயம், சிஎஸ்கே அணியில் கடந்த போட்டியில் இடம் பெற்ற சிம்ரஜித் சிங் அபாரமாக பந்து வீசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இதேபோன்று மோயின் அலி, மிட்செல் சாண்டனர் போன்ற வீரர்களும் சிஎஸ்கே அணிக்கு நல்ல பலமாக இருக்கிறார்கள். இதேபோன்று கடந்த இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆன சிவம் துபே இன்றைய ஆட்டத்தில் அதிரடி காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

குஜராத் அணியை பொறுத்தவரை நடப்பு சீசன் அந்த அணிக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. நடப்பு தொடரில் மட்டும் அவர்கள் 22 வீரர்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். குஜராத் அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் போதிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மேலும் கில், சாகா, டேவிட் மில்லர் போன்ற வீரர்களும் பேட்டிகள் தடுமாறி வருவது அந்த அணிக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. இதனால் வாழ்வா? சாவா? என்ற கட்டத்தில் குஜராத் அணி நாளை சிஎஸ்கே வின் முழுவதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Story first published: Friday, May 10, 2024, 7:41 [IST]
Other articles published on May 10, 2024
English summary
IPL 2024- CSK vs GT Match today preview and analysis in tamil கடும் நெருக்கடியில் குஜராத்.. பிளே ஆப் வாய்ப்பை பெற சிஎஸ்கே போராட்டம்.. அணியில் மாற்றம் நடக்குமா?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+