For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஃபீல்டிங்கில் செய்த தவறு.. 2 வீரர்களையும் வீழ்த்த முடியவில்லை.. தோல்விக்கு காரணம் சொன்ன ருதுராஜ்!

அகமதாபாத் : குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்விக்கான காரணம் குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்களை விளாசியது. சுப்மன் கில் 104 ரன்களும், சாய் சுதர்சன் 103 ரன்களும் விளாசினர். இதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

IPL 2024 CSK vs GT Our fielding let us down and i think we gave away 15 to 20 runs says CSK Captain Ruturaj Gaikwad

இதனால் சிஎஸ்கே அணி விளையாடிய 12 போட்டிகளில் 6 வெற்றி, 6 தோல்வியுடன் உள்ளது. இதனால் 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் சிஎஸ்கே அணி அடுத்த 2 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நிலை உள்ளது.

இந்த தோல்வி குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், எங்கள் அணியின் ஃபீல்டிங் மோசமாக இருந்தது. மிகவும் எளிதாக 10 முதல் 15 ரன்களை ஃபீல்டிங்கில் விட்டுக் கொடுத்துவிட்டோம். திட்டங்களின் படி சரியாக செயல்பட்டோம். ஆனால் குஜராத் அணி மிகச்சிறப்பாக செயல்பட்டனர். அதிலும் சுப்மன் கில், சாய் சுதர்சன் இருவரும் தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள்.

இந்த பிட்சில் ரன்களை கட்டுப்படுத்துவது எளிதாக இல்லை. நாங்களும் விக்கெட் வீழ்த்த தவறிவிட்டோம். அவர்கள் இருவருமே நல்ல கிரிக்கெட் ஷாட்களை ஆடி ரன்களை சேர்த்தார்கள். அடுத்த போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளோம். நிச்சயம் சிறந்த அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக எளிதாக போட்டியாக இருக்காது.

நாளை மறுநாள் போட்டி என்பதால், ஓய்வுக்கு கூட நேரம் இருக்காது. அதிலும் இரவு போட்டி இல்லாமல் பகல் போட்டியாக இருக்கிறது என்று தெரிவித்தார். நாளை மறுநாள் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, May 10, 2024, 23:50 [IST]
Other articles published on May 10, 2024
English summary
IPL 2024 CSK vs GT : Our fielding let us down and i think we gave away 15 to 20 runs says CSK Captain Ruturaj Gaikwad
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+