Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"இனியும் என்னை எதிர்பார்க்காதீங்க" தோனி செயலால் உடைந்து போன சிஎஸ்கே ரசிகர்கள்.. என்ன நடந்தது?

சென்னை : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இறுதியில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தோனி பேட்டிங் செய்ய வந்தார். இந்த ஆண்டுடன் தோனி ஓய்வு பெற இருக்கும் நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி ஒரு சிக்ஸ் அடித்து போட்டியை முடித்து வைப்பார் என சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் கோஷத்துடன் தோனியை வரவேற்றனர்.

ஆனால், தோனி அதற்கு நேர் மாறாக ஒரு காரியத்தை செய்து சிஎஸ்கே அணியின் எதிர்காலம் ருதுராஜ் கெய்க்வாட் தான் என அடையாளம் காட்டினார்.

IPL 2024 CSK vs KKR MS Dhoni refuse to hit six and finish the game

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து சேஸிங் செய்த சிஎஸ்கே அணிக்கு அதிரடி துவக்கம் அளித்த ரச்சின் ரவீந்திரா 8 பந்துகளில் 15 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஒரு பக்கம் ருதுராஜ் கெய்க்வாட் நிதான ஆட்டம் ஆட அதிரடி ஆட்டம் ஆடிய டேரில் மிட்செல் 25, சிவம் துபே 28 .ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

சரியாக சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் .தேவை என்ற நிலையில் சிவம் துபே ஆட்டமிழந்தார். அப்போது சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசைப்படி ரவீந்திர ஜடேஜா களத்துக்கு வர வேண்டும். ஆனால், அவரை முந்திக் கொண்டு தோனி பேட்டிங் செய்ய வந்தார்.

வெற்றிக்கு 3 ரன்கள் தேவை, தோனி பேட்டிங் என்ற உடன் சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். தோனி முந்தைய காலங்களைப் போல சிக்ஸ் அடித்து போட்டியை முடித்து வைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறியது.

களத்தில் அரைசதம் அடித்த சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் இருந்தார். அவர் ஒரு ரன் எடுத்தார். அடுத்து தோனி சிக்ஸ் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் இரண்டு பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து விட்டு கடைசி 1 ரன் தேவை எனும் நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஸ்ட்ரைக்கை கொடுத்தார். அவர் ஃபோர் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

சிஎஸ்கே ரசிகர்கள் தான் பேட்டிங் செய்வதை பார்க்க விரும்புகிறார்கள் என்பதற்காக பேட்டிங் செய்ய வந்த தோனி, "இனியும் என்னை எதிர்பார்க்காதீர்கள். இனி ருதுராஜ் கெய்க்வாட் தான் கேப்டன் அவர் தான் போட்டியை முடிக்க வேண்டும்" என சொல்லாமல் சொல்லி இருக்கிறார். தோனி சிக்ஸ் அடிக்காததால் சிஎஸ்கே ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். எனினும், சிஎஸ்கே அணி இரண்டு தோல்விகளுக்கு பின் வெற்றி பெற்றதால் ஆறுதல் அடைந்தனர்.

Story first published: Tuesday, April 9, 2024, 8:24 [IST]
Other articles published on Apr 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+