Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2024 CSK : சிஎஸ்கே அணியின் அடுத்த மேட்ச் எப்போது? எந்த அணியுடன்? முழு விவரம்

சென்னை : 2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஆறு போட்டிகளில் ஆடி நான்கு வெற்றிகளை பெற்றுள்ளது. இந்த நிலையில் அடுத்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக தொடர்ந்து இரண்டு போட்டிகளில் ஆட உள்ளது.

ஏப்ரல் 19 அன்று லக்னோவில் நடைபெறும் போட்டியில் சிஎஸ்கே அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை சந்திக்க உள்ளது. அதைத் தொடர்ந்து ஏப்ரல் 23 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி, மீண்டும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோத உள்ளது.

IPL 2024 CSK vs LSG Chennai Super Kings next match with Lucknow Super Giants

லக்னோ அணி ஆறு போட்டிகளில் மூன்று வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. சிஎஸ்கே அணி ஆறு போட்டிகளில் நான்கு வெற்றி பெற்றுள்ள நிலையில், லக்னோ அணியை தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வீழ்த்தினால் பிளே-ஆஃப் வாய்ப்புக்கு மிக அருகே செல்ல வாய்ப்பு கிடைக்கும்.

லக்னோ சூப்பர் ஜெயட்ன்ஸ் அணியில் மயங்க் யாதவ் மீண்டும் காயத்தில் இருந்து அணிக்கு திரும்பி இருக்கிறார். சிஎஸ்கே அணிக்கு எதிராக அவரை அதி வேகத்தில் பந்து வீசச் செய்து வீழ்த்தலாம் என லக்னோ அணி திட்டமிட்டு வரும் நிலையில் அதற்கு சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் தயாராக வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.

2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த போட்டி :

ஏப்ரல் 19 - வெள்ளிக் கிழமை - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் x சென்னை சூப்பர் கிங்ஸ்

ஏப்ரல் 23 - செவ்வாய்க்கிழமை - சென்னை சூப்பர் கிங்ஸ் x லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

Story first published: Thursday, April 18, 2024, 6:42 [IST]
Other articles published on Apr 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+