Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!

சென்னை : சிஎஸ்கே - லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய தரமான மீம்ஸை பார்க்கலாம்.

கில்லி படத்தில், "மீனாட்சியம்மன் கோயில் முன்னாடி மதுர முத்துப்பாண்டியவே அடிச்சிட்டான்.. யாருனே இவன்.. சத்தியமா சொல்றேன் மதுரக்காரனா மட்டுமே இருக்க மாட்டேன்" என்று ஒரு வசனம் வரும். அதில் சேற்றில் விழுந்த பிரகாஷ்ராஜை சிஎஸ்கே அணியாக மாற்றி, முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க லக்னோ என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் மரண மாஸ்.

IPL 2024 CSK vs LSG Match Fantastic memes from social media after csk lost by 6 wickets against Lucknow at Chepauk

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்களை விளாசினார். ஸ்பின்னர்கள் இல்லாமல் வேகப்பந்துவீச்சாளர்களையும் துபே பொளந்து கட்டினார். இதனை அது இது எது நிகழ்ச்சியின் காமெடியை மாற்றி சிவம் துபேவிடம், ஸ்பின்னர்ஸை மட்டும் தான் அடிப்பீங்கனு சொன்னாங்க என்று கேட்க, அதற்கு சிவம் துபே, தம்பி.. 145 கிமீ வேகத்திற்கு கம்மியா போடுற எல்லாருமே எனக்கு ஸ்பின்னர் தான் என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அலப்பறை கிளப்புறோம் மொமண்ட்.

IPL 2024 CSK vs LSG Match Fantastic memes from social media after csk lost by 6 wickets against Lucknow at Chepauk

வடசென்னை படத்தில் ராஜனை கொலை செய்யும் போது தீனா, "சாரி அண்ணா.. நாங்க உன்னை போடலைனா.. நீ எங்க எல்லாரையும் போட்ருவணா" என்பார். இதனை சிஎஸ்கே அணியாக அமீரையும், லக்னோ அணியாக தீனாவையும் மாற்றி, "டேய்.. பிளே ஆஃப் போகும் நேரத்துல என்னைய ஏன்டா போட்ட" என்று சிஎஸ்கே கேட்பதாகவும், அதற்கு லக்னோ அணி, "வேற வழி தெரியலைனா.. நாங்க உன்ன போடலைனா.. நீ எங்க எல்லாரையும் போட்ருவ" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் என்ன பன்றது கஷ்டமா தான் இருக்கு மொமண்ட்.

IPL 2024 CSK vs LSG Match Fantastic memes from social media after csk lost by 6 wickets against Lucknow at Chepauk

சத்ரபதி படத்தில் வடிவேலு தெரியாமல் ஒரு குத்துக்குண்டை போட்டியில் பேயடி வாங்குவார். அதற்கு ஏன்டா அடிச்ச என்று கேட்டால், "சிங்கம்னு சொன்னா அடிக்காம" என்று பதில் வரும். அதுபோல் நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை பொளந்து கட்டிவிட்டார் ஆஸ்திரேலியா அணியின் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ். இதில் குத்துச்சண்டை வீரராக ஸ்டாய்னிஸை மாற்றி, "சுற்றி மஞ்சள் ஜெர்சி போட்டு சியர் பண்ணா அடிக்காம" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் தக் லைஃப் மொமண்ட்.

IPL 2024 CSK vs LSG Match Fantastic memes from social media after csk lost by 6 wickets against Lucknow at Chepauk

"சில்லுனு ஒரு காதல்" படத்தில் சூர்யாவிடம் வடிவேலு ரூம் போட்டு கொடுக்குமாறு கேட்பார். இறுதியில் சூர்யா, "நீ இங்க கிழிச்சதெல்லாம் போதும்.. மூடிட்டு ஊருக்கு கிளம்புடா" என்று சொல்வார். அதில் சூர்யாவாக சிஎஸ்கே ரசிகர்களையும், வடிவேலுவாக முஸ்தஃபிசுர் ரஹ்மானையும் மாற்றி, "உன்னைய ஜிம்பாப்வே மேட்ச்-க்கு கூப்டாங்களே.. இங்க கிழிச்சது போதும்.. பொட்டி படுக்கையை எடுத்துட்டு ஊருக்கு கிளம்புடா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

IPL 2024 CSK vs LSG Match Fantastic memes from social media after csk lost by 6 wickets against Lucknow at Chepauk
Story first published: Wednesday, April 24, 2024, 9:03 [IST]
Other articles published on Apr 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+