Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

MLC 2024 : விராட் கோலி எதிரியை வாங்கிய சிஎஸ்கே தம்பி.. அடுத்த சீசனுக்கு ரெடியாகும் சென்னை அணி!

சென்னை : எம்எல்சி தொடரில் விளையாடி வரும் டிஎஸ்கே அணிக்காக நட்சத்திர வீரர் நவீன் உல் ஹக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ அணியில் விளையாடி வரும் நவீன் உல் ஹக் 10 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த சீசனிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நவீன் உல் ஹக், இந்த சீசனிலும் திறமையை நிரூபித்துள்ளார். அதேபோல் விராட் கோலியுடனான மோதல் காரணமாக இந்தியா முழுவதும் நவீன் உல் ஹக் பிரபலமடைந்துவிட்டார்.

IPL 2024 CSK vs LSG Naveen Ul Haq joins with CSK Sister franchise Texas Super Kings for the MLC 2024

பும்ராவை போல் பவுலிங் ஆக்‌ஷன் இருந்தாலும், கட்டர்ஸ் மற்றும் யார்க்கர் வீசும் திறமையால் நவீன் உல் ஹக் விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். லக்னோ போன்ற மைதானங்களில் நவீன் உல் ஹக்கின் பவுலிங்கை எதிர்கொள்வது பேட்ஸ்மேன்களுக்கு சிரமத்தை கொடுத்தது. அதேபோல் நல்ல ஸ்விங்கை பவுலிங்கில் கொண்டு பவர் பிளே ஓவர்களிலும் ரன்களை கட்டுப்படுத்துகிறார்.

இந்த நிலையில் நவீன் உல் ஹக்கின் பவுலிங் சிஎஸ்கே அணியின் நிர்வாகிகளை ஈர்த்துள்ளது. இதன் காரணமாக ஜூலை மாதம் நடக்கவுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட நவீன் உல் ஹக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே டேரல் மிட்சல், சான்ட்னர், டூ பிளசிஸ், கான்வே, மார்க்ரம் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது நவீன் உல் ஹக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது சிஎஸ்கே அணி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. ஏனென்றால் சிஎஸ்கே அணி நிர்வாகம் தரப்பில் எஸ்ஏ20 மற்றும் எம்எல்சி ஆகிய தொடர்களில் அணிகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த தொடரில் சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடும் வீரர்களை ஐபிஎல் அணிக்கு இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாகம் கொண்டு வருகிறது.

சேப்பாக்கம் மைதானத்தில் இந்த சீசனிலேயே முஸ்தஃபிசுர் ரஹ்மானின் கட்டர் பந்துகள் நன்றாக எடுபட்டன. தற்போது அடுத்த சீசனில் முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு பதிலாக நவீன் உல் ஹக்கை வாங்க சிஎஸ்கே அணி முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதிரானாவை சிஎஸ்கே அணி தக்க வைக்கும் சூழலில், நவீன் உல் ஹக் அவருடன் இணையும் போது சிஎஸ்கே அணியின் பலம் அதிகரிக்கும் என்று பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, May 23, 2024, 20:05 [IST]
Other articles published on May 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+