Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs LSG : சிஎஸ்கே கேப்டன் ருதுராஜுக்கு வந்த சிக்கல்.. ஆறு மேட்ச்சிலும் ஒரே மாதிரியாக நடந்த நிகழ்வு

லக்னோ : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக பதவி ஏற்றுள்ள ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் விஷயத்தில் மட்டும் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறார். டாஸ் வெற்றி என்பது அதிர்ஷ்டத்தை சார்ந்தது என்பதால் ருதுராஜ் கெய்க்வாட்டை நேரடியாக இதில் குற்றம் சொல்ல முடியாது.

ஆனால், டி20 போட்டிகளில் வெற்றிகளை தீர்மானிப்பதில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், இதுவரை நடந்த ஏழு போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆறு முறை டாஸில் தோல்வி அடைந்துள்ளார்.

IPL 2024 CSK vs LSG Ruturaj Gaikwad lost 6 toss out off 7 as a captain


எனினும், சிஎஸ்கே அணி முதல் ஆறு போட்டிகளில் நான்கு வெற்றிகளை பெற்று இருப்பதால் டாஸ் தோல்வி போட்டிகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

சிஎஸ்கே அணி தனது ஏழாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கியது. இந்த போட்டியிலும் டாஸில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. லக்னோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பந்து வீசுவது சாதகமான விஷயமாக பார்க்கப்பட்ட நிலையில் டாஸில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கேப்டன் கே எல் ராகுல் எதிர்பார்த்ததை போல பந்துவீச்சை தேர்வு செய்தார்.

சிஎஸ்கே பிளேயிங் லெவன் : ருதுராஜ், ரச்சின், ரஹானே, மொயின் அலி, சிவம் துபே, ஜடேஜா, தோனி, தீபக் சஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தஃபிசுர் ரஹ்மான், பதிரானா

லக்னோ பிளேயிங் லெவன் : டி காக், கேஎல் ராகுல், ஸ்டாய்னிஸ், ஹூடா, பூரன், பதோனி, க்ருனால் பாண்டியா, ஹென்ரி, பிஷ்னாய், மோசின் கான், யாஷ் தாக்கூர்

Story first published: Friday, April 19, 2024, 20:13 [IST]
Other articles published on Apr 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+