Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவுட்டான அஷுதோஷ் சர்மா.. டான்ஸ் ஆடி அலப்பறை கொடுத்த சிஎஸ்கே வீரர்.. சீனியர் வீரர் அட்ராசிட்டி!

முல்லன்பூர் : பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர் அஷுதோஷ் சர்மாவின் விக்கெட்டை சிஎஸ்கே அணியின் சீனியர் வீரர் டேரல் மிட்சல் டான்ஸ் ஆடி கொண்டாடியது ரசிகர்களிடையே ட்ரெண்டாகியுள்ளது.

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியடைந்தது.

IPL 2024 CSK vs PBKS CSK Player Daryl Mitchell dance to celebrate Ashutosh Sharma wicket is trending in social Media

இதன் காரணமாக சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றிபெறுவதற்கு இளம் அதிரடி வீரர் அஷுதோஷ் சர்மாவின் விக்கெட் முக்கியமாக இருந்தது. ஏனென்றால் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, பராருடன் இணைந்து தரமான ஒரு இன்னிங்ஸை விளையாடி இருந்தார்.

இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 69 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது அஷுதோஷ் சர்மா களமிறங்கினார். அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜடேஜா பவுலிங்கில் பெரிய ஷாட் விளையாட முயன்று வெறும் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இவர் கொடுத்த கேட்சை சிமர்ஜித் சிங் பிடித்த போது, அருகில் ஃபீல்டிங் செய்த டேரல் மிட்சல் டான்ஸ் ஆடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு முன்னதாக சிஎஸ்கே அணியின் பிராவோ மட்டுமே ஸ்லெட்ஜிங், டான்ஸ் போன்று களத்தில் உற்சாகமான கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்.

அவருக்கு பின் டேரல் மிட்சல் டான்ஸ் ஆடி கொண்டாடியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் நியூசிலாந்து அணியின் டேரல் மிட்சல் களத்திற்கு வெளியில் உற்சாகமாக இருந்தாலும், களத்தில் எப்போதும் பரபரப்பாக இருப்பார். வெற்றிக்கு பின்னரே அவரின் முகத்தில் சிரிப்பை பார்க்க முடியும். அப்படியான மிட்சல், களத்தில் டான்ஸ் ஆடி கொண்டாடியதற்கு சிஎஸ்கே அணியே காரணம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Story first published: Monday, May 6, 2024, 15:55 [IST]
Other articles published on May 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+