Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

”இதெல்லாம் சிஎஸ்கே அணிக்கு சாதாரணம்” தோனியை பொளக்கும் சென்னை ரசிகர்கள்.. மிரட்டல் மீம்ஸ் இதோ!

சென்னை : சிஎஸ்கே - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

IPL 2024 CSK vs PBKS Fantastic memes from social media after csk lost to pbks by 7 wickets at chepauk

சிவா மனசுல சக்தி படத்தில் மகாநதி சங்கர் எஃப்.எம் ஸ்டேஷனில் பஞ்சாயத்தாகி வெளியில் வரும் ஜீவாவை பார்த்து, "நீ என்னடா சொக்கா கூட இல்லாமல் முண்டமா நிக்கிற" என்று சொல்வார். அதனை மிட்சல் தனியாக 2 ரன்கள் ஓடியதை மாற்றி, "நீ என்னடா.. தோனிக்கு பைய்ஸ் நிக்கிற மாதிரி தனியா 2 ரன் ஓடிட்டு இருக்க" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

IPL 2024 CSK vs PBKS Fantastic memes from social media after csk lost to pbks by 7 wickets at chepauk

வடிவேலுவிடம் கொள்ளையடிக்க வரும் 2 பேர், அவரிடம் இருக்கும் செயின், மோதிரம் எல்லாவற்றையும் பிடிங்கிய பின், கத்தியை மட்டும் அவர்களிடம் இருந்து கேட்பார். அப்போது கத்தியை வைத்து மீண்டும் அந்த பொருட்களை வாங்கும் வடிவேலு, "2 பேரும் அப்படியே தலையை ஒட்டி வைங்க.." என்று சொல்வார். இதனை அப்படியே ஷர்துல், சஹர் இருவரையும் ஒன்றாக நிறுத்துவதாக மாற்றி, "அவன் 4ல விட்டுட்டு போறான்.. இவன் 6ல் இருந்து ஸ்டார்ட் செய்து லெகசியை தொடர்கிறீங்களாக்கும்.. தலையை அப்படியே ஒட்டி வைங்க" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அடப்பாவிங்களா மொமண்ட்.

IPL 2024 CSK vs PBKS Fantastic memes from social media after csk lost to pbks by 7 wickets at chepauk

வேல் படத்தில் வடிவேலு, "ஒரு செல்ஃபோனை ரூ.1.5 லட்சம் கொடுத்து வாங்கிய முதல் கிறுக்கன் நானா தான் இருப்பேன்" என்று சொல்வார். இதனை மிட்சல் 2 ரன்களுக்கு ஓடியதை மாற்றி, "இல்லாத ரன்னுக்கு 2 ரன்கள் ஓடின முதல் கிறுக்கன் நானாதான் இருப்பேன்" என்று கூறுவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் உச்சக்கட்ட காமெடி ரகம்.

IPL 2024 CSK vs PBKS Fantastic memes from social media after csk lost to pbks by 7 wickets at chepauk

தலைநகரம் படத்தில் ஜிம் பாடி என்று நாயகியிடம் கெத்து காட்டும் வடிவேலுவை, சிறுவன் ஒருவன் நாயகன் சுந்தர்.சி-யிடம் கோர்த்துவிடுவான். அப்போது வடிவேலு, "பயபுள்ள.. எப்படி கோர்த்துவிடுது பாரு" என்று சொல்வார். அதுபோல் சிஎஸ்கே அணிக்காக முன் காலத்தில் ஆடிய சாம் கரண், தோனியை ஸ்பின்னரான ராகுல் சஹரிடம் கோர்த்துவிட்டுவிட்டார். இதில் சிறுவனாக சாம் கரணையும், வடிவேலுவாக தோனியையும் மாற்றி, "சுட்டிக்குழந்தை.. எப்படி ஸ்பின்னர் கிட்ட கோர்த்து விடுது பாரு" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு லட்ச ரூபாய் காண்ட்ராக்ட்டா மொமெண்ட்.

IPL 2024 CSK vs PBKS Fantastic memes from social media after csk lost to pbks by 7 wickets at chepauk

வடசென்னை படத்தில் கடலில் இருந்து இறங்கி வரும் ராஜனிடம், ஹமீது என்ற சிறுவன், பைனோகுளோரை கேட்பான்.. அப்போது ராஜன், "வேணுமா உனக்கு" என்று கொடுப்பார். இதில் ஹமீதாக சாம் கரனையும், அமீராக சிஎஸ்கே அணியை மாற்றி, பைனோகுளோரை கொடுப்பது போல் 2 புள்ளிகளை கொடுப்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சிஎஸ்கே ரசிகனின் மனக்குமுறல்.

Story first published: Thursday, May 2, 2024, 8:48 [IST]
Other articles published on May 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+