Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெங்களூர் நகரில் நின்ற மழை.. சிஎஸ்கே, ஆர்சிபி போட்டிக்காக இரக்கம் காட்டும் வருண பகவான்

ஐபிஎல் தொடரில் ஒரு காலிறுதி போல் சிஎஸ்கே ஆர்சிபி அணிகள் மோத போகும் இன்றைய ஆட்டம் அமைந்திருக்கிறது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால், 16 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு சொல்லும்.

ஆர்சிபி அணி வெற்றி பெற 18 ரன்கள் வித்தியாசம் அல்லது 11 பந்துகள் எஞ்சிய நிலையில் வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் .இந்த நிலையில் பெங்களூருவில் இன்று மாலை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு நிபுணர்கள் கணித்த நிலையில் இன்று காலை முதல் வெயில் கொளுத்தி எடுத்தது.

IPL 2024 CSK vs RCB - Again Raining in Bangalore made fans very concern

இதனால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருந்தனர். மழை கணிக்கப்பட்டு இருக்கும் நிலையில் வெயில் பெய்ததால் இனி போட்டிக்கு எந்த சிக்கலும் இருக்காது என்று ரசிகர்கள் கருதினர். ஆனால் மதியம் நேரம் ஆனவுடன் யாருமே எதிர்பார்க்காத வகையில் பெங்களூரில் மதிய நேரத்தில் மழை கொட்டி வருகிறது.

இதனால் இன்றைய ஆட்டம் நடைபெறுமா என்பதில் சந்தேகம் நிலவியது. இந்த நிலையில், தற்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது பெங்களூருவின் தெற்கு பகுதியில் லேசான மழை இருந்தாலும்,சின்னசாமி மைதானத்தில் தற்போது மழை பெய்யவில்லை. இதனால், மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள் மைதானம் முன் குவிந்து வருகின்றனர்.

மழை லேசாக பெய்தால் கூட அடுத்த சில மணி நேரத்தில் போட்டி நடைபெறுவதற்கான சூழல் இருக்கும்.ஆனால் தொடர்ந்து போட்டி நடைபெறும் நேரத்தில் பெய்தால் நிச்சயம் ஆட்டம் தொடர்வதற்கான வாய்ப்பு இல்லை. டி20 உலக கோப்பை வேறு அருகில் வருவதால் ஈரமான மைதானத்தில் வீரர்கள் விளையாடினால் காயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் போட்டியை இப்படி ஆபத்தான சூழலில் பிசிசிஐ நடத்த விரும்பாது. இதனால் என்ன ஆகப்போகிறது என்பதை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Story first published: Saturday, May 18, 2024, 13:29 [IST]
Other articles published on May 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+